சவூதி அரேபியா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐம்பெரு விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 -வது அமர்வின் முதலாவது கூட்டம், 101-வது செயற்குழு கூட்டமாக சென்ற 17/03/2017, வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து சிறப்பாக நடந்தேறியது.
இம்மன்றதின் ஆலோசகர் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான் அவர்கள் தலைமை ஏற்க சகோ.எஸ்.எம்.முஹம்மது லெப்பை இறைமறை ஓத, சகோ.எஸ்.டி .ஷேக் அப்துல்லாஹ் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
மன்றத் தலைவர் சகோ.குளம்.எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
செயற்குழு கூட்டம் பற்றிய அறிமுகம் நம் மன்றத்தின் முக்கிய நோக்கமான கல்வி மற்றும் மருத்துவம், அதன் நிமித்தம் நடந்தேறும் உறுப்பினர்களின் கருத்துப்பகிர்வுகள் ,பங்களிப்புகள் மற்றும் செயற்குழு குறித்த இதர செய்திகளை புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு விபரமாக எடுத்துரைத்தும் அனைவரையும் அன்புடன் வரவேற்றும் கொண்டார்.
தலைமையுரை:
இச்செயற்குழு ஒரு மினி பொதுக்குழுவை போல் உள்ளதென்றும், உறுப்பினர்களின் பங்களிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறதென்றும்,
இம்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இங்கு எந்த நன்மைக்காக ஒன்று கூடி இருக்கின்றோமோ அந்த நன்மையை நாம் ஒற்றுமையுடன் நம் ஊரின் உயர்வுக்காக உழைக்க வல்ல இறையோனை பிரார்த்திப்பதாகவும் கூறியதுடன் தங்கள் மனதில் உள்ள நல்ல பல கருத்துக்களை தாரளமாக தயக்கம் இன்றி ஒவ்வருவராக இங்கே பதிய வையுங்கள் என்று எடுத்துக்கூறி நிறைவு செய்தார். இந்த செயற்குழுவை தலைமை ஏற்று நடத்தும் மன்ற ஆலோசகர் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான்.
மன்ற செயல்பாடுகள்:
08 - வது அமர்வின் புதிய உறுப்பினர்களை வரவேற்று பின் சென்ற கூட்டத்தின் தீர்மானம், கடந்த மாதம் குடும்ப சங்கம நிகழ்வாக மிக சிறப்பாக நடைபெற்ற ஐம்பெரும் விழா பொதுக்குழு கூட்டம் சார்ந்த செய்திகள், இதற்காக வேண்டி எல்லா வகைகளிலும் அனுசரணை வழங்கி உதவிய, ஒத்துழைப்பு நல்கிய பங்களிப்பு செய்த அனைவருக்கும் தூரம் தொலைவிலிருந்து மிக ஆர்வமுடன் வந்து கலந்து கொண்ட காயலர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் கூறியதுடன், இம்மன்றத்தின் ஆரம்பகால வரலாற்றை விபரமாக எடுத்து கூறி, மேலும் நிறைவேறிய மன்றப்பணிகள் மற்றும் நாம் பொறுப்பேற்றிருக்கும் இப்பணி இறைவனுக்கு மிக உகப்பான ஒரு உன்னத அமானிதம், அவ்வமானிதத்தை நிறைவேற்ற அனைத்து உறுப்பினர்களும் மிக ஆர்வமும் அக்கறையும் கொண்டு தவறாது எல்லா கூட்டங்களிலும் கலந்து சிறப்பிக்கணும் என உறுப்பினர்களை அன்புடன் வேண்டிக்கொண்டார் செயலாளர் சகோ.சட்னி எஸ்.ஏ.கே.செய்யிது மீரான்.
புதிய அமர்வின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களாக வந்திருந்த மக்காசகோ. அல்ஹாபிழ் எம்.என். முஹம்மது ஸாலிஹ், சகோ , யான்பு என்.எஸ்.ஹுசைன் ஹல்லாஜ் மற்றும் ஊரிலிருந்து உம்ராவிற்காக வந்துள்ள சகோ,எம்.கே.ஜபாருல்லாஹ் ஆகியோரை வாழ்த்தி வரவேற்று தனது பேச்சை துவக்கிய மற்றுமொரு செயலாளர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம், உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான இக்ஃரா கல்வி சங்கத்திலிருந்து வந்துள்ள IAS,IPS போன்ற படிப்புக்கான பயில உள்ள மாணவருக்கு உதவியில் உலக காயல் நலமன்றங்களின் பங்களிப்பில் நம் மன்றமும் பங்களிப்பு செய்தல் வேண்டியும் மற்றும் கத்தர் காயல் நலமன்றத்தின் வழிகாட்டலின் படி பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சீருடை வழங்கும் சம்பந்தமாக இதற்கு நம்மன்றத்தின் பங்களிப்பு வேண்டியும் வந்திருந்த தகவலையும் மேலும் நம் மன்றத்திற்கு வரும் மனுக்களின் பரிசீலனை, அதனூடே நடைபெறும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் செயற்குழுவில் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து தங்களின் யோசனைகள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டி அன்பு வேண்டுகோள் வைத்து அமர்ந்து கொண்டார்.
நிதி நிலை:
நடந்தேறிய ஐம்பெரும் விழா பொதுக்குழுவின் வரவு மற்றும் செலவுகள், தற்போதைய மன்ற இருப்பு, பயனாளிகளுக்கான உதவிகள் போன்ற நிதிநிலைகளை மிக விளக்கமுடன் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் தெரிய தந்தார்.
மருத்துவ உதவிகள்:
உலக காயல் நலமன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா அறக்கட்டளை மூலமாக வந்திருந்த மனுக்கள் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வாசிக்கப்பட்டு பின்னர் முறையே பரிசீலிக்கப்பட்டது.
மிக அவசரகால நிலையில் ICU வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர், தைராய்டு அறுவைச் சிகிச்சை, சிறு வயதில் சர்க்கரை நோய்க்கு பாதிப்பான சிறு குழந்தை, தொடர் சிகிச்சை பெரும் இருவர் என பாதிப்புக்குள்ளான 05 காயல் சொந்தங்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்க உறுப்பினர்கள் அனுமதியுடன் உறுதி செய்யப்பட்டது, மேலும் அவர்கள் பூரணமாக நலம் பெற்றிட வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
அத்துடன், நமதூரில் புதியதாக திறக்கப்பட்டுள்ள “மக்கள் மருந்தகம்” ஆரம்ப கால முதலீட்டுக்கான நிதியளிப்பு மற்றும் திறப்புவிழா நிகழ்விற்கான செலவிற்கும் என தொகையை வழங்கப்பட்டது.
கத்தர் காயல் நலமன்றத்தின் வழிகாட்டலின் படி பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச சீருடை வழங்கும் சம்பந்தமாக இதற்கு நம்மன்றத்தின் பங்களிப்பு 30 பேருக்கும் பள்ளிச் சீருடைகள் வழங்கவும் நிதி உதவிகள் வழங்கப்பட்டது.
IAS,IPS போன்ற படிப்புக்கான பயில உள்ள மாணவருக்கு நம்மன்ற பங்களிப்பாக இக்ரா கல்வி சங்கத்திற்கு நிதி ஒதுக்கிடு செய்தும்
பயிலும் மாணவர் நன்கு பயின்று எல்லாவித தேர்வுகள் பயிற்சிகளில் வெற்றி பெற்றும் காயலின் பெருமையை மேலும்பறைசாற்றும் வண்ணம் சிறப்பு பெறவும் வல்லோன் அல்லாஹ்வை வேண்டியும் வாழ்த்தவும் செய்யப்பட்டது.
கலந்துரையாடல்:
மன்ற உறுப்பினர்களின் ஆரோக்கியமான கலந்துரையாடலில் நல்ல பல கருத்துக்கள் பகிரப்பட்டன. மன்றத்தின் சந்தாதாரர்களை அதிகரிப்பது, ஜகாத் நிதிகளை பெருக்குவது , மன்றத்தின் புதிய உறுப்பினர்கள்உட்பட யாவரும் தாமாகவே முன்வந்து தன்னார்வத்துடன் மக்கள் நலப்பணிகளை செய்திட முன் வர வேண்டியது. போன்ற அழகிய கருத்துக்களை உறுப்பினர்கள் பதிவாக்கினர்.
இன்ஷாஅல்லாஹ் மன்றத்தின் அடுத்த 102 -வது செயற்குழு கூட்டம் எதிர்வரும் 21-04-2017 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா - ஷரஃபியாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெறுமென்றும் அறிய தருகின்றோம். பொறியாளர். சகோ.எம்.எம். முஹம்மது முஹியத்தீன் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் அனுசரணை வழங்கியவருக்கும் மனதார நன்றி நவில, சகோ. அல்ஹாபிழ் எம்.என். முஹம்மது ஸாலிஹ் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
கூட்டத்திற்கான முழு அனுசரணையை சகோ.பிரபு எஸ்.ஜே. நூர்தீன் நெய்னா சிறப்புடன் செய்து இருந்தார்.
தகவல் மற்றும் படங்கள்:
எஸ்.ஐச்.அப்துல் காதர்.
எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
02.04.2017.
|