தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர் திரளாகப் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில் - அரசுப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அடுத்து “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி, 02.04.2017. ஞாயிற்றுக்கிழமையன்று காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
ததஜ தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அக்தர் அய்யூப் துவக்கவுரையாற்றினார். கல்வியாளர்களான சித்தீக், ஃபயாஸ் ஆகியோர் – பவர் பாய்ண்ட் மூலம் உயர் கல்வி வழிகாட்டு உரைகளை நிகழ்த்தியதுடன், பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்துப் பேசினர்.
ததஜ காயல்பட்டினம் நகர கிளை தலைவர் ஷம்சுத்தீன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நிகழ்ச்சியின் இறுதியில் உயர்கல்வி வழிகாட்டுக் கையேடு வழங்கப்பட்டது.
ததஜ மாவட்ட துணைச் செயலாளர் அஸார், மாணவரணி மாவட்டச் செயலாளர் நிஸார், ஒருங்கிணைப்பாளர்களான ஷமீம், வஸீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை, ததஜ காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள், மாணவரணியினர் செய்திருந்தனர்.
தகவல் & படம்:
‘தேக்’ முஜீப் & ரஸீன் |