சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்த்தின் 59ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நகர்நலனுக்காக 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 59-வது செயற்குழு கூட்டம் மன்ற துணை தலைவர் P.M.S. முஹம்மது லெப்பை அவர்கள் இல்லத்தில் சகோ ஆதில் அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளியன்று (31-Mar) சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்திற்கு பார்வையாளராக லால்பேட்டை அர்ரஹ்மான் பைத்துல்மால் தலைவரும், எம்மன்ற உறுப்பினருமான சகோ S.M. முஹம்மது நாசர் அவர்கள் பங்கேற்றார்கள்.
இக்கூட்டம் ஆரம்பமாக மதிய உணவோடு தொடங்கப்பட்டது, பின்னர் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் வாசித்த பின் இறைமறை ஓதி ஹாபிழ் சதக் ஷமீல் அவர்கள் தொடக்கி வைத்தார். அதன் பின் வந்தோரை சகோ K.S.M. அப்துல் காதிர் அவர்கள் வரவேற்றார்.
நிதி உதவிகள்: (ரூ. 2,02,000/
ஊரிலிருந்து உதவி கேட்டு வந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு மொத்தம் 15 கடிதங்களுக்கு ரூ. 1,87,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது. அத்துடன் பெறப்பட்ட சிறுதொழில் செய்வது சம்பந்தமாக வந்த 1 விண்ணப்பத்திற்கு ரூ. 15,000/ வும், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பெறப்பட்ட கடிதங்களுக்கு இக்கூட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவிகளின் சாரம்சத்தை துணைப்பொருளாளர் வெள்ளி சித்தீக் அவர்கள் வாசித்தார்.
ரமலான் உணவு பொருள் வழங்கும் திட்டம்
கடந்த 5 வருடங்களை போன்று இவ்வருடமும் புனித ரமலான் மாதத்தில் ஏழை நோன்பாளிகளுக்கு நோன்பு நோற்பதற்கும் , திறப்பதற்கும் தேவையான உணவு பொருட்களை வழங்குவது என்றும் மேலும் கடந்த வருடங்களை போலவே அதே பயனாளிகளுக்கு பெருநாள் தின இரவில் நாட்டுக்கோழி வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டு , பயனாளிகளை தரும் ஒரு நபருக்கு SR.170 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இந்த நல்ல அமலில் தங்களை ஈடுபடுத்த விரும்பும் நம் மன்ற உறுப்பினர்கள், சகோ இஸ்மத் நஃபல் (056 147 2371) மற்றும் சகோ சூபி ( 050 334 3728) அவர்களை தொடர்பு கொள்ளவும் . ( இ-மெயில்: inoufal.hotmail.com – soofimms@gmail.com)
மக்கள் மருந்தகம் (Generic Medical Store)
நமது ஷிஃபா வின் மூலமாக புதிதாக நமதூர் மெயின் ரோடு தாஹா காம்ப்லெஸ் இல் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் மருதகத்தின் செயல்பாடுகள் பற்றி எம்மன்ற தலைவர் சகோ நூஹு அவர்கள் எடுத்துரைத்த பின் செயற்குழு உறுப்பினரகள் தங்களுடைய கருத்தினை பரிமாறினார் .
இமாம் & பிலால்
உலக நல மன்றங்களை இணைத்து தாய்லாந்து நல மன்றத்தால் கடந்த பல வருடங்களாக சிறப்பாக முன்னெடுத்து நடாத்தும் இறைஇல்ல பணியாளர்களுக்கான(இமாம் & பிலால்) பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் வழமைபோல் இவ்வருடமும் நாமும் இணைவது என்று முடிவு செய்து அந்த வகைக்காக ரூபாய் 30,௦௦௦ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
54 வது பொதுக்குழு
எம் மன்றத்தின் 54 வது பொதுக்குழு இன்ஷா அல்லாஹ் வருகின்ற புனித ரமலான் மாதம் ஜூன் 2 வெள்ளிகிழமையன்று இஃப்தார் நிகழ்ச்சியுடன் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் வைத்தது நடைபெறும் . இந்நிகழ்ச்சிக்கு தாங்கள் அனைவரும் வருகை தருவதோடு புதிதாக வந்துள்ள நம் காயல் சொந்தங்களையும் அழைத்து வரும்படி கேட்டுக்கொன்கின்றோம்
திருமண வாழ்த்து
எம் மன்ற பொதுக்குழு உறுப்பினர் சகோ யாசர் அரபாத் அவர்களுக்கு வருகின்ற 29.04.2017 அன்று நடைபெற இருக்கின்ற திருமண வைபகத்துக்கு எம் மன்றம் சார்பாக வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடைய இல்லற வாழ்வு சிறக்க பிராத்தனை செய்யப்பட்டது.
பார்வையாளர் உரை
நடை பெற்ற கூட்டம் சம்பந்தமாக பார்வையாளராக கலந்து கொண்ட சகோ நாசர் அவர்கள் தனது கருத்துரையில் முதலாவதாக தம்மை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி , நம்மன்றம் நல்ல பல திட்டங்களை செய்வது அறிந்து மிக்க மகிழ்வதாகவும், இன்னும் நம்மன்றம் இதே ஒற்றுமையோடு இருந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
இக்கூட்ட ஒருங்கினைப்பாளர்கலான சகோதரர்கள் P.M.S. முஹம்மது லெப்பை, இஸ்மத் நஃபல், இஸ்மாயில் மற்றும் சதக் ஷமீல் ஆகியோர் சிறப்பான ஏற்பாட்டினை செய்திருந்தனர் .
இறுதியாக சகோ நுஸ்கி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக இடவசதி செய்து தந்த சகோ P.M.S. முஹம்மது லெப்பை மற்றும் அனுசரனையாலர்க்கும் ,அறுசுவையான உணவு சமைத்து தந்த சகோ உவைஸினா லெப்பை அவர்களுக்கும், நன்றி நவில, சகோதரர் ஹாபிழ் தாவூத் இத்ரீஸ் துஆவோடு, குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாத் கா.ந.மன்றம் சார்பாக...
தகவல் & படங்கள்:
M.N.முஹம்மத் ஹஸன்
|