மின்வாரியத் துறையின் அறிவுரைக்கு மாற்றமாக – காயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடிக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை ரத்து செய்யக் கோரி, காயல்பட்டினம் துணைப் பொறியாளருக்கு “நடப்பது என்ன?” குழுமம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில், கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - கிறிஸ்துவ வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. CRZ உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறி அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர், நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் நடைபெற்று வரும் இக்கட்டுமானங்கள் தொடர்பாக - முழு விபரங்கள், மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான இக்கட்டுமானத்திற்கு, 07 364 002 0925 என்ற எண்ணிலான மின்னிணைப்பு, PARISH PRIEST, St. Antony Curuzadi, Singi Durai, Kayalpattnam என்ற பெயரில் முன்காப்பீடு பத்திரம் (INDEMNITY BOND) பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்காப்பீட்டுப் பத்திரம் பெற்று இணைப்புகள் வழங்குவது, சட்டத்திற்குப் புறம்பாக - உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள - தமிழக அரசின் அரசாணை தடைசெய்துள்ள - ஒரு புறம்போக்கு நிலத்தில் நடைபெறும் மதரீதியான கட்டுமானத்திற்குப் பொருந்தாது என்பதால், இந்த இணைப்பை ரத்து செய்ய கோரி தொடர்புடைய உயரதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம், மூலம் சில நாட்களுக்கு முன்பு மனு வழங்கப்பட்டது.
தற்போது - இவ்வாறு புறம்போக்கு நிலங்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு முன்னர், மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ் (NO OBJECTION CERTIFICATE) வாங்க வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியத்துறை - தனது பொறியாளர்களுக்கு, 2010ஆம் ஆண்டே, அறிக்கை அனுப்பியுள்ளதாக “நடப்பது என்ன?” குழுமம் அறிகிறது. அந்த அறிக்கையையும் மீறி வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை ரத்து செய்ய கோரி, காயல்பட்டினம் மின் நிலைய துணைப் பொறியாளரிடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் விபரம் கீழே வழங்கப்பட்டுள்ளது:-
[Beginning of Memorandum]
"Sub.: Electricity Removal/Relocation/Regularisation of encroachments in public places by the way of religious structures Direction of Hon'ble Supreme Court of India direction in SLP No.8519/2006 Govt. Policy formulation Further instructions issued Regarding.
Ref.: Memo. No.CE/Comml/EE3/AEE1/F.Instruction/D.526/10, dt. 8.10.10.
---
In continuation to the instructions issued in the reference cited, further instructions are issued.
1. The instructions issued vide ref. Cited shall be implemented forthwith without any exception.
2. In future, the service connections to the religious structures in public places shall be effected only after obtaining NOC and clearance from the District Collectors concerned.
3. A list of region wise service connections that have already been effected to the religious structures in public places in Tamil Nadu since 13.9.2010 is enclosed herewith. Hence all Chief Engineer/Distribution are instructed to furnish the following details within two days.
3.1. Name of Region-
3.2. Name of the Service Connection.
3.3. SC. NO.-
3.4. Whether NOC from concerned department was obtained while effecting supply. If so, Name of the Department which has issued NOC may be furnished.
Encl.: List of services effected.
[End of Memorandum]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|