காயல்பட்டினத்தில், 5 வயதுக்குட்பட்ட 2547 குழந்தைகளுக்கு, 11 முகாம்களில் இளம்பிள்ளைவாதம் - போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
தமிழக அரசின் சார்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் (போலியோ) தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம், 02.04.2017. ஞாயிற்றுக்கிழமை, 30.04.2017. ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நடத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 02.04.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 07.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெற்றது. காயல்பட்டினத்தில் 11 முகாம்களில் நடத்தப்பட்டது. காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஹமீத் ஹில்மீ, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் ஆகியோர் முகாமைத் துவக்கி வைத்தனர்.
முகாம்கள் வாரியாக போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விபரங்கள் வருமாறு:-
ஓடக்கரை துவக்கப் பள்ளி - 223
எல்.கே.மேனிலைப் பள்ளி – 232
கே.டீ.எம். தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி – 152
ரெட் ஸ்டார் சங்கம் – 212
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) – 298
தீவுத்தெரு ஊ.ஒ.துவக்கப் பள்ளி – 291
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு – 241
அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் – 367
கோமான் மேலத் தெரு - 265
கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) – 140
கடையக்குடி (கொம்புத்துறை) - 126
மொத்தம் – 2547.
இம்முகாம்களுக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ஒருங்கிணைப்பில், கோமான் தெரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஹமீத் ஹில்மீ, சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து செய்திருந்தனர்.
|