தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் – ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ, இன்று அதிகாலை 04.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 51.
அன்னாரின் ஜனாஸா, காயல்பட்டினம் சின்ன நெசவுத் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 03 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்படவுள்ளது. மகளிரும் தொழுகையில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்பு அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1. Re:... posted bynizam (india)[02 April 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45405
இன்னாலில்லாஹி வஇன்னா அலைனா ராஜிஊன் மிக சிறந்த மார்க்க அறிஞர் தமிழ் இலக்கியத்தில் பண்டித்துவம் பெற்றவர் பல சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் அன்றைய உலக நடப்போடு மார்க்க தீர்வுகளை கூறுவார்கள்
2. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் )[02 April 2017] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45406
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மிகவும் அருமையான ஒரு கத்தீபை இழந்து இருக்கின்றோம். பார்வையாளர்களை கட்டிப்போடும் பேச்சாளர்களில் இவர்களும் ஒருவர். சரளமான உரை, உவமை உவமானம் , அடுக்கு மொழி என்று இவர்களின் பேச்சில் வீரியம் இருக்கும். தவறு செய்பவர்களை துணிந்து கண்டிக்கக் கூடியவர்கள்.
பல காலங்களாக கிட்னி பாதிப்பால் மிகவும் அவதியுற்றார்கள். சற்று உடல்நிலை தேறினாலும் ஜும்மா பயானுக்கு ஆஜராகி விடுவார்கள்.
கிருபையுள்ள வல்ல அல்லாஹ் இவர்களின் நல்ல சேவைகளை அங்கீகரிப்பானாக.
தெரிந்தோ தெரியாமலேயோ செய்த பாவங்களை அவர்களின் ஏட்டில் இருந்து அழித்து மன்னிப்பானாக.
சுவனத்தில் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற பதவியை அளிப்பானாக.
இவர்களின் பிரிவில் வாடும் குடும்பத்தார், ஜமாத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.
4. நல்ல சிந்தனையாளர்! posted byS.K.Salih (Kayalpatnam)[02 April 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45410
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அடியேன் விரும்பிய - நகைச்சுவை உணர்வுடன் கூடிய நல்ல மனிதர். காயல்பட்டினத்தில் அவரது பணி - ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் பேராசிரியராகத் துவங்கியது. அது முதலே எனக்கும் அவர்களோடு மிக நெருங்கிய தொடர்பு இருந்தது.
ஆழ்வையிலுள்ள மத்ரஸத்துர் ரஹ்மான் திறப்பு விழாவும், இவர்களின் திருமணமும் ஒரே நேரத்தில் மாநாடு போல நடைபெற்றது. (1993) என்று நினைக்கிறேன். அன்று அடியேன் - திருக்குர்ஆனைத் தமிழாக்கத்துடன் கிராஅத்தாகக் கொடுத்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தேன்.
கருணையுள்ள அல்லாஹ் அவர்களின் பிழைகளைப் பொருத்தருள்வானாக... அவர்களது குடும்பத்தாருக்கு நல்ல பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.
6. Re:...மறக்க முடியாத ஆசிரியர் posted bySithy Lareefa (Chennai)[02 April 2017] IP: 117.*.*.* India | Comment Reference Number: 45413
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆயிஷா சித்தீக்காவில் நாங்கள் மாணவியர்களாக இருந்த போது எங்களின் மதிப்பிற்குரிய ஆசிரியர்... சிறந்த நகைச்சுவை உணர்வாளர்... அவரது வகுப்பறைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை....
கடினமான பாடங்களும் கூட அவருடைய எளிமையான சொல்வழக்குகளாலும், நடைமுறை உதாரணங்களாலும் மிகவும் விரும்பிப் பயின்ற பாடங்களாகியது எங்களுக்கு கிடைத்த பெரும்பாக்கியம்.
அன்னாரது குடும்பத்திற்கு அல்லாஹ் பொறுமையைத் தந்தருள வேண்டும்... அன்னாரது பிழைகளை அல்லாஹ் பொறுத்தருளி... இந்த உலகத்தில் அவருக்கு ஒரு ஜன்னத்தை மனைவியாக அல்லாஹ் வழங்கியது போல, மறு உலகிலும் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் என்னும் சுவனபதியைத் தந்தருள்வானாக... ஆமீன்.
8. Re:... ஜாமிஉத் தவ்ஹீத்... அப்துல் மஜீத் உமரி வபாத். posted byசாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (தாவனகெரெ.)[04 April 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45421
ان لله وان اليه راجعون
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه
وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد
ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس
اللهم ابدله داراً خيراً من داره وأهلاً خيراً من أهله ...آمين
யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும் இவருக்கு
கொடுப்பாயாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross