சில்வர் ஜோன் நிறுவனத்தால் நடத்தப்படும் புகழ்பெற்ற ஒலிம்பியாட்ஸ் கல்வித் திறனாய்வுத் தேர்வில், விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதுகுறித்து, அப்பள்ளியின் அறங்காவலர் எஸ்.ஐ.புகாரீ தந்துள்ள செய்தியறிக்கை:-
சில்வர் ஜோன் நிறுவனத்தால் (SILVER ZONE FOUNDATION) நடத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமான ஒலிம்பியாட்ஸ் (OLYMPIADS) 2016-2017 ஆண்டிற்கான கல்வித் திறனாய்வுத் தேர்வில் விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியர் பலர் பங்கெடுத்துக் கொண்டனர்.
ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல்,மற்றும் பொது அறிவு உட்பட பல்வேறு பாடப் பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் வருடந்தோறும் உலகளவில் பல் வேறு நாடுகளின் 9000 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கெடுத்துக் கொள்வது இதன் சிறப்பம்சமாகும்.
சென்ற வருடம் 2016 நவம்பர் 16 ந் தேதி துவங்கிய டிசம்பர் 20 ந் தேதி வரை நடை பெற்ற ஒலிம்பியாட்ஸ் தேர்வுகளின் முதல் சுற்றில் விஸ்டம் பப்ளிக் பள்ளி மாணவ மாணவியர் பலர் தங்கம்,வெள்ளி ,மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது .
மேலும் எமது பள்ளியின் IV STD மாணவி A .M. நபீஸா, ஒலிம்பியாட்ஸ் முதல் சுற்றில் உலகளவில் 262 வது இடத்தைப பெற்று 2 ஆம் சுற்றுக்கு முன்னேறினார் . அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வில் ஆங்கிலம் ,மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் மாநில அளவில் முதலிடமும், உலகளவில் 7 வது மற்றும் 28 வது இடங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாநிலத்தில் முதலிடம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியை பள்ளி நிர்வாகிகள், முதல்வர் ,மற்றும் ஆசிரியைகள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|