காயல்பட்டினத்தில் மிகவும் பழுதடைந்து, போக்குவரத்திற்கு சிறிதும் தகுதியற்ற நிலையிலிருந்த ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், புதிய சாலை அமைக்கும் பணி 30.03.2017. வியாழக்கிழமையன்று துவங்கியது.
சில நாட்கள் இடைவெளிக்குப் பின், மீண்டும் 02.04.2017. ஞாயிற்றுக்கிழமையன்று புதிய சாலை அமைப்பதற்காக, ஏற்கனவே உள்ள சாலையின் பள்ளமான பகுதிகள் மட்டும் கிளறி விடப்பட்டன. சாலையின் இதர பகுதிகளில் மேலே படிந்திருந்த மணல் – காற்றடித்து அகற்றப்பட்டு, புதிய சாலை அமைக்கப்பட்டது.
இவ்வாறாக, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனையிலிருந்து, கடற்கரை வரையிலான ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், புதிய சாலை அமைக்கும் பணி, 04.04.2017. செவ்வாய்க்கிழமையன்று நிறைவுற்றது.
|