சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான திருக்குர்அன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் மாணவி முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். விரிவான விபரம்:-
சிங்கப்பூர் இஸ்லாமிய தலைமையகமான MUIS சார்பாக, சிங்கப்பூர் தேசிய அளவிலான திருக்குர்அன் மனனப் போட்டி, 05.03.2017. அன்று நடைபெற்றது.
வயது அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் – சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் – ஹாஃபிழா எஸ்.எச்.ஹமீத் ஃபாத்திமா ஆலிமா முஅஸ்கரிய்யா தம்பதியின் மகள் ஹாஃபிழா எம்.எஸ்.உம்மு உமாரா பங்கேற்றார்.
அந்நாட்டின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவியர் பங்குற்ற இப்போட்டியில், சிங்கப்பூர் அல்ஜுனைத் அல்இஸ்லாமிய்யா பள்ளியின் சார்பில் கலந்துகொண்ட இம்மாணவி, முதலிடம் பெற்றதாக, 26.03.2017. அன்று MUIS சார்பில் நடத்தப்பட்ட விழாவில் அறிவிக்கப்பட்டார். இச்சாதனைக்காக அவருக்கு சாம்பியன் கோப்பை, கேடயம் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டியில், இந்திய மாணவி முதலிடம் பெற்றுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவி எம்.எஸ்.உம்மு உமாரா, காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் – மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலருமான மர்ஹூம் எஸ்.ஏ.பீர் முஹம்மத் அவர்களின் மகன் வழிப் பேத்தியும், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் – ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீயின் மகள் வழிப் பேத்தியுமாவார்.
சிங்கப்பூரிலிருந்து...
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத்
|