காயல்பட்டினம் நகராட்சி டெண்டர் முறைக்கேடுகள்: திருநெல்வேலி RDMA க்கு உள்ளாட்சிமன்றங்களின் முறைமன்ற நடுவம் கண்டனம்!! முழு விசாரணை நடத்த சிறப்பு குழுவிற்கு பரிந்துரை!!!
காயல்பட்டினம் நகராட்சியில் 29.5 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்கோபுர விளக்குகள் டெண்டர் மற்றும் 61 லட்ச ரூபாய் மதிப்பிலான துப்புரவு
பணியாளர்கள் நியமனம் டெண்டர் ஆகியவற்றில் முறைக்கேடுகள் நடந்துள்ளது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்று - சென்னையில் உள்ள
தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவதில் தொடரப்பட்டிருந்தது.
எட்டு மாதங்களாக நடந்த விசாரணையை தொடர்ந்து, அவ்வழக்கில் தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் - இந்த டெண்டர்கள் சம்பந்தமான புகார்கள் குறித்து முறையாக
விசாரிக்காமல், "பொறுப்பினை தட்டிக்கழித்து கோப்பினை முடித்த" திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனரை, நடுவம்
கண்டித்துள்ளது.
மேலும் - இவ்வழக்கில் உள்ள புகார்களை, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் தொடர்ந்திருந்த வழக்கில் உத்தரவிடப்பட்ட "நேர்மையான அலுவலர்கள் அடங்கிய குழு" மூலம் முறைக்கேடுகள் குறித்து தெளிவாக கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டுமென நகராட்சி நிர்வாக ஆணையரை நடுவம் பணித்துள்ளது.
தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் ஆணை எண் 27/2017
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross