காயல்பட்டினம் புறவழிச் (பைபாஸ்) சாலையில் தமிழக அரசின் TASMAC மதுக்கடை திறப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தகவலைக் கேள்வியுற்று காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதி மக்களும் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மதுக்கடை அமைக்கப்படுவதைத் தடுக்கக் கோரி அரசின் பல்வேறு துறைகளுக்கும் பொதுமக்கள் கோரிக்கைகளை வைத்தவண்ணம் உள்ளனர்.
1. Re:...சாது மிரண்டால் காடு கொள்ளாது posted bymackie noohuthambi (colombo)[09 April 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45447
கலைஞர், எம்ஜிஆர் அம்மா என்ற ஆளுமைகள் முடிந்து விட்டன. அவர்கள் செய்த தீமைகளில் மிக வெட்ட வெளிச்சமானதும் அவமானத்துக்கும் மக்கள் விரோத செயலுக்கும் ஒரு மௌன சாட்சியாக இருந்து வருவது இந்த டாஸ்மாக் கடைகள் இரண்டு தலைமுறைகளை குடிகாரர்களாக மாற்றி குடும்பங்களில் கொலை தற்கொலைகளை அறிமுகப்படுத்தி அவர்கள் இப்போது ஓரமாகி விட்டார்கள்.
யார் ஒருவர் ஒரு தீமைக்கு துணை போவார்களோ அதை பரிந்துரைப்பார்களோ அந்த தீமை உலகில் நடந்து வரும் காலமெல்லாம் அந்த தீமையில் அவர்களுக்கும் ஒரு பங்குண்டு என்று இறைவன் சொல்வது எவ்வளவு சத்தியமானது.
அசுர பலத்தில் அவர்கள் ஆட்சி நடந்த காலங்கள் அது. இப்போது அவை அஸ்தமனமாகி விட்டன. திமுகவும் சரி அதிமுகவும் சரி அதன் ஆளுமைகளை இழந்து நிற்கின்ற காலம் இது.
இப்போது இந்த டாஸ்மாக் என்ற குடிகார நிலையத்தை மூடுவதற்கு நீதிமன்றங்கள் உத்தரவு இட்டுக் கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் , மதுக் கடை இல்லாத ஊர் காவல் நிலையம் இல்லாத ஊர் திரை அரங்குகள் இல்லாத ஊர் என்ற பெருமைக்குரிய ஊரில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அந்த முயற்சியை ஊர் மக்கள் ஒன்று திரண்டு எதிர்த்து நின்று முறியடிக்க வேண்டும்.
இப்போதுள்ள ஆட்சி தலைவருக்கு 1992 காயல்பட்டினத்தில் நடந்த மீன்கடை போராட்டம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சாதுவானவர்கள் என்று எல்லோராலும் போற்றப் பட்ட காயல்பட்டினத்து மக்கள் போராட்டக் களத்தில் இறங்கியபோது இந்த மாவட்டமே சுடுகாடுபோல் மாறியது. அண்ணா பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்த நாளில் காயல்பட்டினம் மக்கள் நூற்றுக்கணக்கில் பாளையம்கோட்டை சிறைக்கு கம்பிகளுக்கு பின்னால் இருந்தார்கள். காயல்பட்டினத்துக் காரர்களுக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது என்று மாநிலமே அதிர்ச்சியில் உறைந்தது.
அவை இப்போது மலரும் நினைவுகளாக மீண்டும் அரும்புகிறது. ஒரு வேளை அப்படி ஒரு கறுப்பு நாளை எதிர்நோக்கவேண்டிய நிலை இந்த டாஸ்மாக் மூலம் வருமோ என்று நான் பயப்படுகிறேன். அந்த நிலை உருவாகாமல் பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சி தலைவர் கையில் உள்ளது. காயல்பட்டினத்து மக்களை சீண்டி பார்க்காதீர்கள். அவர்கள் சாதுக்கள்தான். அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் எதிலும் ஈவு சேவாக விட்டுக் கொடுத்து போகக் கூடியவர்கள்தான். ஆனால்.......
YOUR FREEDOM ENDS WHERE NOSE BEGINS
என்பதில் உறுதியானவர்கள்.
WHILE WE NEGOTIATE FREELY WE WILL NOT NEGOTIATE FREEDOM என்பதில் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.
விஷப் பரீட்சைக்கு தயாராகாதீர்கள். ஊரின் மாண்புக்கும் கலாச்சாரத்துக்கும் ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் ஆட்சி தலைவர் அனுமதிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவருடைய ஆட்சிக்கு காலமே வெறும் அற்பமான மூன்று வருடங்கள்தான். எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை விட எப்படி ஆட்சி செய்யக் கூடாது என்பதை பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள்.
எனவே ஊர் மக்களும் கட்சி, ஜமாஅத் முஹல்லா என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இந்த டாஸ்மாக் எண்ணத்தை முளையில் கிள்ளி எறிய திட சங்கல்பம் எடுத்துக் கொள்வோமாக. அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross