காயல்பட்டினம் புறவழிச் (பைபாஸ்) சாலையில் தமிழக அரசின் TASMAC மதுக்கடை திறப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு மதுக்கடை திறக்கப்பட்டால், பொதுமக்களைத் திரட்டிப் போராடப்போவதாக – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC கடை திறக்கப்பட்டால் - மக்களை திரட்டி போராடுவேன் என கோட்டாட்சியருக்கு தெரிவித்துள்ளதாக திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் - நடப்பது என்ன? குழுமத்திடம் தகவல்!
காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC மதுக்கடையை துவங்கிட வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியானதையொட்டி - இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு WHATSAPP மற்றும் SMS தகவல்கள் அனுப்ப - நடப்பது என்ன? குழுமம் பொது மக்களிடம் கோரிக்கை வைத்தது.
அதை தொடர்ந்து - நூற்றுக்கணக்கான காயலர்கள், மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணுக்கு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே - நகர தி.மு.க. பிரமுகர்கள் ஜனாப் KAS முத்து மற்றும் ஜனாப் SAK ஜலீல் ஆகியோர் நடப்பது என்ன? குழுமத்தை தொடர்புக்கொண்டு - விபரங்களை கேட்டறிந்தனர்.
இன்றிரவு - திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் MLA அவர்கள் - நடப்பது என்ன? குழுமத்தை தொடர்புக்கொண்டு - காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC கடை திறக்கப்பட்டால், மக்களை திரட்டி போராடுவேன் என கோட்டாட்சியருக்கு தாம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross