காயல்பட்டினம் புறவழிச் சாலையில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க முயற்சிக்கப்படுவதை எதிர்த்து, நேற்று (10.04.2017. திங்கட்கிழமை) காலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மஜக மாவட்டச் செயலாளர் ஜாகிர் ஹுஸைன், மாவட்டப் பொருளாளர் நவாஸ், மாவட்ட துணைச் செயலாளர் நஜீப், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் ராஜிக், நகரச் செயலாளர் ஜிப்ரி, நகர பொருளாளர் மீரான், நகர துணைச் செயலாளர் மொகுதூம் ஆகியோர் இம்மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
பின்னர் இதுகுறித்து பேசிய அவர்கள், மதுபானக் கடை திறக்கப்பட்டால், அதற்குப் பூட்டு போடும் போராட்டத்தை தம் கட்சியின் சார்பில் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
தகவல்:
N.A.தைமிய்யா
|