காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை)யில், 11.04.2017. செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், தமிழக மீன் வளத்துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
கொம்புத்துறை மீனவ கிராமத்தில் கூட்டு மேலாண்மையின் மூலம் மீன் வளங்களை வளங்குன்றா வகையில் பயன்படுத்துதல் கூட்டத்தில் மீன்வளத்துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ்,இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்பு.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மூலம் காயல்பட்டிணம் கொம்புத்துறை மீனவ கிராமத்தில் கூட்டு மேலாண்மையின் மூலமாக மீன் வளங்களை வளங்குன்றா வகையில் பயன்படுத்தல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழச்சியில் தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் டாக்டர்.பீலா ராஜேஷ்,இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டு இந்திய கடல் வாழ் உயிர்வள மன்றம் கொச்சியால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான சிறு நிதி உதவி திட்டத்தின் கீழ் மீன் வளக்கல்லூரீ மாணவர் செல்வன் சுதன் எழுதிய தமிழக கடல் ஆமைகள் வளமும் பாதுகாப்பும் என்ற கையேட்டினை வெளியிட்டு பேசியதாவது:
கொம்புத்துறை கிராமத்தில் 175 மீனவ குடும்பங்கள் வசிக்கும் மீனவ கிராமம் ஆகும். இங்குள்ள மீனவர்கள் கடலில் வெகுதூராம் சென்று பல நாட்கள் தங்கி மீன் பிடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் 6 முதல் 9 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி இழை படகுகள் கொண்டு மீன்பிடிக்கின்றனர். கரையில் இருந்து சுமார் 45 கடல் மைல் தூரம் கடலுக்குள் சென்று தூண்டில் வைத்து மீன் பிடிக்கின்றனர். கொம்புத்துறை மீனவர்கள் மீனவர் சங்கங்கள் அமைத்து தொழில் ரீதியாகவும் பொருhளாதார ரீதியாகவும் பயன் அடைகின்றனர். இங்கு மீன் ஏலம் விடுதல் மற்றும் மீன் வியாபரம் தனித்துவம் வாய்ந்தது. அனைத்து மீன்களும் இனம் வாரீயாக எடைக்கு ஏற்றார் போல் வியாபரம் செய்யப்படுகின்றது. பிடித்த மீன்களை சரியான முறையில் பனிக்கட்டியிட்டு பாதுகாப்பதால் மீன்கள் சிறந்த தரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரீ கொம்புத்துறை கிராமத்தை தத்து எடுத்து கல்லூரி மாணவர்கள் மூலம் கொம்புத்துறை கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கில வகுப்பு பாடங்கள் நடத்தப்படுகிறது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மூலம் இங்கு ஒரு வாரகாலம் முகாம் இட்டு நல்ல செயல்களை மீனவ மக்களுக்கு எடுத்து கூறி வருகின்றனர். இது பாராட்டுக்குரியது ஆகும். சென்ற வாரம் தமிழக அரசின் மீன்வளத்துறையினரால் இவ்வாறு செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நிலைத்த வாழ்வதாரத்திற்கான மீன்வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கூட்டு மேலாண்மையின் மூலமாக மீன்வளங்களை வளங்குன்றா வகையில் பயன்படுதல் திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மேலாண்மை குழுவில் பங்கு தந்தை, ஊர்தலைவர், கூட்டுறவு சங்கத்தலைவர், மீனவர் சங்க பிரதிநிதிகள் வியாபாரீகள் சங்க பிரதிநிதிகள், மீன்வளக் கல்லூரி பேராசிரீயர்கள், மீன்வளத்துறை அதிகாரீகள், கடல் பொருள் ஏற்றுமதி ஆணைய துணை இயக்குநர் ஆகியோர் இடம் பெற்று சிறப்பாக இந்த மீனவ கிராமமான கொம்புத்துறையை தமிழ்நாட்டிலேயே முன்னோடி மாதிரீ மீன்பிடி கிராமமாக திகழ்வதை மனதார பாராட்டுகிறேன். இத்திட்டம் மேலும் ஒர் ஆண்டுக்கு நீடிக்கப்படும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது:
மீன் வளங்களை பொறுத்தமட்டில் பாறை, சிலா, கணவாய், சூரை, கலவா போன்ற மீன் இனங்கள் அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. பிடிக்கப்பட்ட மீன்களின் மொத்த நிறத்தினை அதன் முதன்முதலாக இன முதிர்ச்சியடையும் நிறத்துடன் ஒப்பிடுகையில் கொம்புத்துறையில் இனப்பெருக்கம் செய்த பின்னர்தான் மீன் பிடிக்கப்படுகிறது.
கொம்புத்துறை கிராமத்தில் தமிழக அரசால் மீன் இறங்குதளம் கட்டப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பட்டுக்கு வர உள்ளது. மீனவ மக்களின் அடிப்படை தேவைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவர்த்தி செய்து வைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதி மக்களின் கோரீக்கையான சாலைவசதி, பேருந்து வசதி, கூட்டம் நடத்தும் அரங்கம் ஆகியவை விரைவில் நிறைவேற்றியிட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
மேலும் கிராம பேரிடர் மேலாண்மை அணி உறுப்பினர் 6 நபர்களுக்கு சான்றிதழ்களை மீன்வளத்துறை ஆணையார் டாக்டர் பீலா ராஜேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்.இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.
மேலும் புன்னக்காயல் கிராமத்தில் ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மீன் இறங்கு தளம் பணியினை மீன்வளத்துறை ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்.இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் முனைவர் நூர் ஜஹான் பீவி, மீன்வளக்கல்லூரி முதல்வர் முனைவர் கோ.சுகுமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் திரு.தியாகராஜன், மீன்வளக்கல்லூரி பேராசியர் முனைவர் பா.சுந்தரமூர்த்தி, இணை இயக்குநர் (மீன்வளத்துறை) முனைவர் தீனா செல்வி, உதவி இயக்குநர் திருமதி பாலசரஸ்வதி, பேரிடர் அபாய மேலாண்மைதிட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் திருமதி.விஜயா, வட்டாட்சியர் திரு.அழகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அரவிந்தன், தி,பாண்டியராஜன் மற்றும் கிராம மக்கள், கூட்டு மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|