காயல்பட்டினம் பப்பரப்பள்ளி பகுதியில் பல ஆண்டுகளாக நகராட்சியில் சேரும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அப்பகுதி மக்களின் சார்பாக எஸ்.ஏ.கே. ஷேக் தாவூத் ("மாஷா அல்லாஹ்" தாவூத்) பெயரில் வழக்கு ஒன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - தொடரப்பட்டது (வழக்கு எண் 221/2016[SZ]).
இந்த வழக்கு - இன்று மீண்டும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் - நீதிபதி எம்.எஸ். நம்பியார் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் முனைவர் நாகின் நந்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், வாதங்கள் அடிப்படையில் - நீதிபதி எம்.எஸ்.நம்பியார் தனது இறுதி உத்தரவினை இன்று பிறப்பித்தார்.
அதில் - எல்.எப்.சாலை / அதன் ஓரங்கள், நகரின் இதர சாலைகள்/ அவற்றின் ஓரங்கள் ஆகியவற்றில் காயல்பட்டினம் நகராட்சி தனது குப்பைகளை கொட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி 23, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஜனவரி 31, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
ஜனவரி 17, 2017 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
டிசம்பர் 13, 2016 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணை
|