பொது சுகாதாரம், மக்கள் நலன் கருதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் - இறைச்சி விற்பனைக்கான ஒழுங்குமுறைகள் குறித்து பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளார்:-
Ø ஆடுகளை இறைச்சிக்காக வெட்டும்போது அவற்றை மாநகராட்சி ஆடுவதைக் கூட்டத்தில் மட்டுமே வெட்டி பயன்படுத்தவேண்டும்.
Ø எக்காரணம் கொண்டும் இறைச்சிகளை திறந்த வெளிகளிலோ, பொது மக்கள் பார்வையில் படும் விதத்திலோ வைத்து வதை செய்யவோ, காட்சிப்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது.
Ø மாநகராட்சி ஆட்டிறைச்சி கூடத்தால் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை இடப்படாத இறைச்சிகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது.
Ø மாநகர எல்லைக்குள் எவ்வித காரணத்தை முன்னிட்டு பன்றிகளை வளா;க்கவோ, இறைச்சிக்காக வதைக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
Ø இறந்த மற்றும் நோயுற்ற ஆடுகளை இறைச்சிக்காக வதை செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது.
Ø மாமிசங்களை பார்சல் செய்ய பாலிதீன் பைகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
Ø விற்பனையில் எஞ்சிய இறைச்சியினை சாதாரண குளிசாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யக் கூடாது. இதற்காக பிரத்யேகமாக பயன்படுத்தும் ILR குளிர்சாதப்பெட்டிகளில் (4 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை) பெட்டிகளில் வைத்து மட்டுமே விற்பனை செய்யவேண்டும்.
Ø சாலையோர, தற்காலிக மற்றும் தீடீர் கடைகள் மூலம் இறைச்சிக்காக வதை செய்யவோ விற்பனை செய்யவோ அனுமதி கிடையாது.
Ø தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்று மட்டுமே கடைகள் நடத்த வேண்டும்.
Ø தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சட்டம் 1939, தூத்துக்குடி மாநகராட்சி சட்டம் 2008 மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 நடைமுறைகளுக்கு உட்பட்டு மட்டுமே இறைச்சிகடைகள் செயல்படவேண்டும். தவறும் பட்சத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு;ள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு தக்க அபராதம் விதிக்கப்படுவதோடு, உரிமம் ரத்து செய்தல், கடைகளைப் பூட்டி சீல் வைத்தல், குடிநீர் இணைப்பு துண்டித்தல், நீதி மன்ற மேல் நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.
Ø இறைச்சிக்காக ஆடுகளை வெட்டுவது மற்றும் விற்பனைகளை ஒழுங்குமுறை படுத்துதல் தெடர்பான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் மேற்சொன்ன விவரங்களை கண்காணித்து ஒழுங்கீனங்களில் ஈடுபடும் விற்பனை கூடங்கள் மீது சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |