தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம்:-
தூத்துக்குடி மாவட்ட அளவில் – பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டி, தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.
09.04.2017. ஞாயிறு அன்று எதிரணி வருகை தராததால், எல்.கே.மேனிலைப் பள்ளி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் அவ்வணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
10.04.2017. திங்கட்கிழமை காலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தூத்துக்குடி புனித லசால் மேனிலைப் பள்ளியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அந்த கோலை வீரர் அப்துல்லாஹ் அடித்தார்.
மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மேனிலைப் பள்ளியை எதிர்த்தாடிய எல்.கே.மேனிலைப் பள்ளி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மாவட்ட சாம்பியன் ஆனது. அவ்வணியின் அப்துல்லாஹ், தாவூத், ஹாஃபிழ் ஆகிய வீரர்கள் அந்த கோல்களை அடித்தனர்.
இந்த வெற்றியின் மூலம், தமிழ்நாடு கால்பந்துக் கழகம் சார்பில் இம்மாத இறுதியில், இராமநாதபுரத்தில் நடத்தப்படவுள்ள மாநில அளவிலான கிட்டு கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாட எல்.கே.மேனிலைப் பள்ளி அணி தகுதி பெற்றுள்ளது.
|