காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் (பணி நிறைவு) டேவிட் செல்லப்பா இன்று 15:00 மணியளவில், பேயன்விளையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 62.
இவர், எல்.கே.மேனிலைப் பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் - காலஞ்சென்ற பீட்டர் க்றிஸ்டோஃபர் உடைய மகளின் கணவர் (மருமகனார்) ஆவார்.
1. ஆழ்ந்த இரங்கல். posted byM.Z.SIDDIQ. (KAYALPATNAM.)[15 April 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45466
மரியாதைக்குரிய ஆசிரியர் டேவிட் செல்லப்பா அவர்களின் மறைவு என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளது.
அவர்கள் எனக்கு பத்தாம் ஆண்டு அறிவியல் பாடம் எடுக்கும் போது, அவர்கள் புரிய வைக்கும் விதம் மிகவும் இலகுவாக இருக்கும். அதனாலேயே நான் அதிக மதிப்பென் எடுக்க முடிந்தது.
அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், கடுஞ்ச்சொல் யாரையும் பேசமாட்டார்கள்.
அன்னாரது இழப்பால் வாடும் அவர்களின் குடும்பத்தார்களுக்கு மனஅமைதியை இறைவன் கொடுக்கவேண்டும். ஆசிரியரின் ஆத்மா இறைவனின்பால் சாந்தியடைய வேண்டும்.
ஆழ்ந்த இரங்களோடு
ஆசிரியரின் முன்னாள் மாணவன்
m z .siddiq . காயல்பட்டணம் .
2. Re:... posted byசாளை எஸ்.ஐ. ஜியாவுத்தீன் (அல்கோபர்)[16 April 2017] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45468
மிகவும் வருத்தமடையக் கூடிய செய்தி.
பழகுவதற்கு மிகவும் அருமையான ஆசிரியர். அதிகம் கோபப்படாதவர். சிரித்த முகத்துடனே இருப்பவர்.
அழகாக உடை உடுத்தி, ஸ்டைலாக இருப்பார்கள். நாங்கள் ரசித்த ஆசிரியர்களில் இவர்களும் ஒருவர். (இன்னொரு ஆசிரியர், ஆசான் ஹனிபா சார் அவர்கள் )
என்னை எங்கு பார்த்தாலும், கையை பிடித்துக்கொண்டு என் முதல்,என் சொந்தங்கள், கூட படித்த நண்பர்கள் என்று பலரின் பெயரை நினைவு கூர்ந்து விசாரிப்பார்கள். அவர்கள் காரில் சென்றாலும் என்னைக் கண்டதும் காரை விட்டு இறங்கி வந்து, தோளில் தட்டி, விசாரிப்பார்கள். அவ்வளவு பாசமானவர்கள் . அதற்க்கு காரணம்,
* எல்.கே. பள்ளியில் ஆசிரியராக பணிக்கு வந்து, பஸ் ஸ்டாப்பில் பெட்டியுடன் இறங்கும் சமயம், நான் தான் அவர்களின் பெட்டியை தலையில் சுமந்துக்கொண்டு பள்ளிக்குள் அழைத்து சென்றேன்.
* அவர்கள் முதல் முதல் பாடம் எடுத்தது எங்கள் வகுப்புக்கு தான்.
* வகுப்பறையில் அவர்கள் பாடம் எடுக்கும் சமயம் நோட்டு,புத்தகம், பேனா அனைத்தையும் மூடி வைத்து விட்டு, பாடத்தை கவனியுங்கள் என்று முதல் முதலில் எங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தவர்கள். அப்படியே மனதில் பதியும் படி அருமையாக பாடம் எடுப்பார்கள்.
கூடுதல் சுவாரஸ்யமான நிகழ்வு,
பள்ளியில் சேர்ந்த சில காலங்களில், பள்ளி முடிந்ததும் போஸ்ட் ஆபீஸ்- பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு யாரையோ தேடிக் கொண்டு இருப்பார்கள். . பல நாட்கள் இப்படியே தொடரவும், எங்களுக்குள் ஒரு பரபரப்பு.
எல்லோரும் என்னிடம், நீ தான் சாருக்கு மிக நெருக்கம், நீ கேளு, நீ கேளு என்று உசுப்பு ஏத்த...,
நான், சார்.. என்ன தினமும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு யாரை நோட்டம் விடுகின்றீர்கள் என்று வினவ.. அவர்களின் முகத்தில் பூத்த புன்னகையும், வெட்கமும் இன்றும் மனதில் நிற்கின்றது..
காரணம், அன்று முஹ்யத்தீன் மெட்ரிக் பள்ளியில், பணி புரிந்து கொண்டு இருந்த மல்லிகா டீச்சரை ( அதான் நம் தமிழ் ஆசான் பீட்டர் சார் உடைய மகள்) அவர்களை பார்க்க தான் என்று அறிந்து கொண்டோம். நிச்சயித்த பெண்ணை பார்க்கத்தான் இவ்வளவு நாளும் பஸ் ஸ்டாப் தவம்.
இந்த பஸ் டாப் நிகழ்வை அடிக்கடி சொல்லி சிரிப்பார்கள்.
இப்படி பல நிகழ்வுகள் நெஞ்சில் நிலலாடிக்கொண்டு இருக்கின்றது.
இவர்களின் இழப்பால் வாடும் குடும்பத்தார்கள், மாணவர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வல்ல இறைவன் உங்களுக்கு அழகிய பொறுமையை தருவானாக.
Eventhough its hard to accept the demise of our beloved David Chellappa Sir , its real .
The days with him on physics tuition evenbefore 25 years ,still remembering The interesting way of teaching physics .
.
Undoubtedly He is a verygood teacher &tutor of physics .
May HIs soul rest in peace .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross