காயல்பட்டினம் கடற்கரையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருசடி தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மனு மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரையோரம் - மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி அனுமதியில்லாமல், அரசு புறம்போக்கு நிலத்தில் - குருசடி ஒன்று சட்ட விரோதமாகக் கட்டப்பட்டுவருகிறது.
CRZ விதிமுறைகளுக்கு எதிராகவும், புறம்போக்கு நிலங்களில் வழிப்பாட்டுத்தலங்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகவும் அமைந்துள்ள இந்தக் குருசடியை அப்புறப்படுத்த கோரி – “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - இது தொடர்பான, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளுக்கும் மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக “நடப்பது என்ன?” குழுமம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியுள்ள மனு மீது நடவடிக்கை எடுக்க - திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே - இந்த கட்டுமானங்களில் CRZ விதிமுறைகள் மீறல் இருப்பதால், இது சம்பந்தமான துறைகளிடமும் “நடப்பது என்ன?” குழுமம் மனு வழங்கியிருந்தது. அதனை தொடர்ந்து - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், நடவடிக்கை எடுக்க கோரி - காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் - இந்த கட்டுமானத்திற்கு, சட்டத்திற்கு புறம்பாக - மின்னிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அறிந்து, இது சம்பந்தமான துறைகளுக்கும் நடப்பது என்ன? குழுமம் மனு வழங்கியது. அதை தொடர்ந்து - 15 தினங்களுக்குள், மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ் (NOC) சமர்ப்பிக்க கோரி - குருசடிக்கு மின்னிணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு நோடீஸ் அனுப்பியிருப்பதாகவும், அந்த சான்றிதழ் (NOC) வழங்கப்படாத பட்சத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் - காயல்பட்டினம் மின் நிலைய துணை பொறியாளர், நடப்பது என்ன? குழுமத்திற்கு பதில் வழங்கியுள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஏப்ரல் 15, 2017; 8:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |