காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் தலைவர் மர்ஹூம் எஸ்.என்.ஸுல்தான் அப்துல் காதிர் உடைய மகன் – அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ.சி.ஷெய்க் நூருத்தீன் – இன்று 03.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலாளர் சொளுக்கு எஸ்.எம்.கபீர் உடைய மருமகனாரும்,
எஸ்.ஏ.சி.இல்யாஸ், எஸ்.ஏ,சி.முல்தஸிம் ஆகியோரின் சகோதரரும்,
எஸ்.என்.ஸுல்தான் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 75400 12920) உடைய தந்தையும்,
ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் உடைய மாமனாரும்,
ஐ.செய்யித் அஹ்மத் கபீர், ஐ.சுல்தான் அப்துல் காதிர் ஆகியோரின் பெரிய தந்தையுமாவார்.
இவர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியரும், ஹாங்காங் தமிழ்ச் சங்கம், ஹாங்காங் இந்தியன் முஸ்லிம் அசோஸியேஷன் ஆகியவற்றின் முன்னாள் செயற்குழு உறுப்பினருமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஜனாஸா, குருவித்துறைப் பள்ளியியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. நேரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
விரிவான தகவல்கள் இதே செய்தியில் விரைவில்...
தகவல்:
ஹாஃபிழ் F.ஷெய்க் ஸலாஹுத்தீன்
படம்:
S.H.முஹ்யித்தீன் அப்துல் காதிர் |