காயல்பட்டினம் புறவழிச் (பைபாஸ்) சாலையில் தமிழக அரசின் TASMAC மதுக்கடை திறப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு மதுக்கடை அமைய அனுமதி வழங்க தமிழக அரசிடம் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், இம்மாதம் 08, 09 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில், காயல்பட்டினம் கடற்கரையில் பொதுமக்களிடம் கைச்சான்றுகள் சேகரிக்கப்பட்டன. மதுக்கடை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் தன்னார்வமுடன் படிவங்களில் கைச்சான்றிட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது (Monday Petition) - சேகரிக்கப்பட்ட கைச்சான்றுகளுடன் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்கவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளும், அங்கத்தினரும் செய்து வருகின்றனர்.
|