மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (09.04.2017. ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்திலுள்ள இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்தியறிக்கை:-
அரசாணை எண் 122 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நாள் 23.01.1980இல், மகாவீரர் ஜெயந்தி அன்று ஆடு, மாடு ஆகிய மிருகங்களை வெட்டவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடைகள் மூடப்பட்டு, அன்று ஒருநாள் விடுமுறை நாளாக அனுசரிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 09.04.2017. ஞாயிற்றுக்கிழமையன்று மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவதால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள ஆடு மற்றும் மாடு ஆகிய விலங்குகளை வெட்டவும், கடைகளில் மாமிசம் விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், அன்றைய நாளில் அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|