காயல்பட்டினம் புறவழிச் (பைபாஸ்) சாலையில் தமிழக அரசின் TASMAC மதுக்கடை திறப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவ்வாறு மதுக்கடை அமைய அனுமதி வழங்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக, திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி – காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
பை பாஸ் சாலையில் TASMAC கடை வர அனுமதி வழங்கக்கூடாது என தாம் மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக தி.மு.க. மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி அவர்கள்- நடப்பது என்ன? குழுமத்திடம் உறுதி!
காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC மதுக்கடையை துவங்கிட வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியானதையொட்டி - இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு WHATSAPP மற்றும் SMS தகவல்கள் அனுப்ப - நடப்பது என்ன? குழுமம் பொது மக்களிடம் கோரிக்கை வைத்தது.
அதை தொடர்ந்து - நூற்றுக்கணக்கான காயலர்கள், மாவட்ட ஆட்சியரின் அலைபேசி எண்ணுக்கு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே - சென்னையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த, திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், காயல்பட்டினத்தை சார்ந்தவருமான ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீது அவர்கள் - நடப்பது என்ன? குழுமத்தை தொடர்புக்கொண்டு விபரங்களை கேட்டறிந்தார்.
இன்று மாலை - அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி அவர்கள், ஹாஜி எம்.எம்.ஷாஹுல் ஹமீது அவர்கள் மூலமாக - நடப்பது என்ன? குழுமத்தை தொடர்புக்கொண்டு - பை பாஸ் சாலையில் - TASMAC கடை திறக்க அனுமதி வழங்கக்கூடாது என தாமும் - மாவட்ட ஆட்சியரிடம் பேசுவதாக உறுதி அளித்தார்.
|