காயல்பட்டினம் புறவழிச் (பைபாஸ்) சாலையில் தமிழக அரசின் TASMAC மதுக்கடை திறப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் (Whatsapp) மூலம் எதிர்ப்புகளைப் பதிவு செய்யுமாறு காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் – தம் குழும உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பின்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது:-
பை பாஸ் சாலையில் TASMAC கடை திறக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு WHATSAPP மூலம் எதிர்ப்பை தெரிவியுங்கள்!
காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC மதுக்கடை திறக்க முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
THE TAMIL NADU LIQUOR RETAIL VENDING (IN SHOPS AND BARS) RULES, 2003 விதிமுறை 8(3) படி மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெறப்படவேண்டும்.
...(3)The shop shall be in the location approved by the Collector before commencing the business in the shops...
எனவே - காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC கடை திறக்க அனுமதி வழங்கவேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு +91 94441 86000 எண்ணில் WHATSAPP அல்லது SMS தகவல் அனுப்ப பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
==========
மாதிரி வாசகம்
==========
"மரியாதைக்குரிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, தயவுகூர்ந்து காயல்பட்டினம் பை பாஸ் சாலையில் TASMAC கடை திறக்க அனுமதி வழங்காதீர்கள்.
[உங்கள் பெயர்]
[உங்கள் தெரு]
[உங்கள் ஊர்]"
இவ்வேண்டுகோளையடுத்து பொதுமக்களும் தமது எதிர்ப்புகளை மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து வருகின்றனர். அம்முறையீடுகளில் சில வருமாறு:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross