ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் சார்பில், “காயலர் தினம் - 2017” குடும்ப சங்கம நிகழ்ச்சி, நாளை (31.03.2017. வெள்ளிக்கிழமை) நடத்தப்படவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
துபையில் மார்ச் 31 அன்று ''காயலர் தினம் 2017''!
ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் தொடங்கும்!!
திட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் மார்ச் 31 வெள்ளிக்கிழமை “காயலர் தினம் 2017” கொண்டாடப்படும்.
துபை ஸத்வாவில் அமைந்துள்ள ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும்.
காலை 10 முதல் 11 மணி வரை உறுப்பினர்களின் வருகைப் பதிவும், பரஸ்பரம் முகமன் கூறலும் நடைபெறும்.
காலை 11 முதல் பகல் 12 மணி வரை குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி நடைபெறும்.
பின்னர் ஜும்ஆ தொழுகைக்காக அருகிலுள்ள மஸ்ஜிதுக்கு ஆண்கள் சென்று வர, அதன் பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பிக்கும்.
பொதுக்குழு உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெறும். துபை காயல் நல மன்ற செயல்பாடுகள் குறித்தும், நமதூர் பிரச்சினைகள் குறித்தும் அலசப்பட்டு, அவற்றிற்கு பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்படும்.
பிற்பகல் 2.15 மணிக்கு மதிய உணவு பரிமாறப்படும்.
மாலை 3.00 மணிக்கு பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்குமான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகும். ஆண்களுக்கு வேடிக்கை விளையாட்டுகளும், வினாடி வினா போட்டியும் நடைபெறும்.
மாலை 4.15 மணிக்கு அஸ்ர் தொழுகை இடைவேளையைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் தொடரும்.
மாலை 5.15 மணிக்கு பரிசுக் குலுக்கல் நடைபெற்று, குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்க நாணயங்களும், கண்கவர் பரிசுகளும் வழங்கப்படும்.
மாலை 6 மணிக்கு நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்.
காயலர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்துத் தரவேண்டும் என்று துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
துபை கா.ந.மன்றம் சார்பாக...
ஐக்கிய அரபு அமீரகம் - துபையிலிருந்து….
M.S.அப்துல் ஹமீத்
|