நிகழாண்டில் அரசு பொதுத்தேர்வுகளை எழுதி முடித்துள்ள மாணவர்கள் அடுத்து “என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?” என்பதை விளக்கும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை மாணவரணி சார்பில், உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி, 02.04.2017. அன்று காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கப் பிரசுரம்:-
1. Re:... posted byVilack sma (jeddah)[24 March 2017] IP: 151.*.*.* | Comment Reference Number: 45375
மிகவும் சரியான நேரத்தில் நடத்தப்படவுள்ள , பயனுள்ள நிகழ்ச்சி . ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள் . மாணவர்களுடன் பெற்றோர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள படித்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும் . சமீபத்தில் whatsApp மூலம் www .cigma .in மற்றும் www .after12thwhat .com என்ற முகவரியில் இருந்து Ameen - e -Mudassar BE , Indias Leading Career Counsellor , CEO , CIGMA INDIA , Bangalore என்பவர் 12th முடித்தபிறகு படிப்பதற்கு என்னென்ன வகையான கோர்ஸுகள் உள்ளது என்பதை பற்றி சொல்லி இருக்கிறார் . பயனுள்ள தகவல் . நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுபோன்ற தகவல்களையும் கருத்தரங்கில் பரிமாறிக்கொள்ளலாம் .
நீங்கள் நடத்த இருக்கும் இந்த நிகழ்ச்சிதான் உண்மையான " கல்வி விழிப்புணர்வு " . உங்களுடைய முயற்சி முழு வெற்றி அடைய வாழ்த்துக்கள் .
2. சிக்மா அமீன் முதஸ்ஸர் பற்றி posted bySK Shameemul Islam (Chennai)[25 March 2017] IP: 122.*.*.* India | Comment Reference Number: 45382
சகோதரர் விளக்கு எஸ்.எம்.ஏ. சொல்வது போல பெங்களூர் சிக்மாவின் அமீன் முதஸ்ஸர் வழிகாட்டுதலில் மிகவும் திறமை மிக்கவர். எட்டு வருடத்திற்குமுன் நீடூரில் நான் அங்கம் வகித்த மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு நடத்திய கல்விவழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்து ஆங்கிலத்திலும் உர்தூவிலும் உரையாற்றினார். பல்வேறு கேள்விகளுக்கும் விடையளித்தார்.
மேம்போக்காக இதைப்படியுங்கள் அதைப்படியுங்கள் எனக்கூறாமல் ஆழமான பார்வையை முன் வைக்கும் திறன் படைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross