காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் புகாரைத் தொடர்ந்து, கடற்கரை குருசடி விஷயத்தில் நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர், DTCP துணை இயக்குநருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - அரசு புறம்போக்கு நிலத்தில், கீரிக்குளம் எனப்படும் இடத்திற்கும், பெண்கள் அமரும் பகுதிக்கும் மிக அருகில், குருசடி என்ற கிருஸ்துவ வழிபாட்டுத் தலம் - சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானம் - மத்திய அரசின் CRZ NOTIFICATION 2011 விதிமுறைகள் தடைசெய்துள்ள LOW TIDE LINE (LTL) மற்றும் HIGH TIDE LINE (HTL) என்ற இடங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு “நடப்பது என்ன?” குழுமம் புகார் மனுக்களை அளித்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் (DEE) டி.கண்ணன் இடம், “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக கடந்த வாரம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது.
அப்புகாரை அடிப்படையாகக் கொண்டு, தற்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் - உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதில், இவ்விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து - அதுகுறித்த தகவல்களை “நடப்பது என்ன?” குழுமத்திற்கும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் தெரிவிக்கும்படி - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் துணை இயக்குனருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
“நடப்பது என்ன?” குழுமத்திற்கு அனுப்பப்பட்ட உத்தரவின் நகல்:-
|