Re:...எனக்கொரு ஆசை..... posted bymackie noohuthambi (colombo)[29 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45391
சிறப்பான புகாரி ஷரீப் நிகழ்ச்சிகள் 90 ஆம் ஆண்டாக ஆரம்பமாகும் செய்தி மனதுக்கு உவகை தருகிறது.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளை அள்ளி வழங்கியுள்ள புகாரி இமாம் அவர்களுக்கும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ள நபிமொழிகளை ஓதி உணர்ந்து செயல்பட ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கும் புகாரி ஷரீப் உலமாக்களும் அதை ஓதுபவர்கள், அதன் படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முனைபவர்கள் இந்த நிகழ்ச்சிகளுக்கான செலவினங்களை அல்லாஹ்வின் திரு பொருத்தத்தையும் நபிகள் நாயகம் அவர்களின் நல்லாசியையும் பெற்றுக் கொள்வதற்காக இதய சுத்தியுடன் செலவு செய்ப்பவர்களுக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
நீந்த நாட்களாக எனக்கொரு ஆசை . 30 நாட்கள் ஓதினோம் து ஆவுடன் அது நிறைவுற்றது என்றில்லாமல் இறுதி நாளன்று வந்திருப்பவர்கள் 40 ஹதீதுகள் கொண்ட ஒரு நூலை பெற்று சென்று தங்கள் வீடுகளில் வைத்து அதை படித்து அதன்படி அமல் செய்வதற்கு நமது புகாரி ஷரீப் உலமாக்கள் ஒரு முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. தினசரி செலவுகளுக்கும் நேர்ச்சைநாள் செலவுகளுக்கும் தயங்காமல் பொருளாதாரத்தை அள்ளி வழங்கும் வள்ளல்கள் இந்த ஒரு காரியத்துக்கும் துணை நின்றால் அது ஒரு அழியாத பொக்கிஷமாக எல்லா வீடுகளிலும் இருக்கும்.SADHAQATHUN JAARIYAA வாகவும் அது அமையும்.
உலமாக்கள் நிறைந்த இந்த சபையில் ஒரு அறிவிப்பாக வெளியிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று முதல்நாள் உரை ஆற்ற விருக்கும் முத்துவாப்பா ஆலிம் அவர்களுக்கும் தொடர்ந்து 30 நாட்கள் உரையாற்ற விருக்கும் ஏனைய உலமாக்களும் ஒரு அன்பு வேண்டுகோளாக இந்த நல்ல நேரத்தில் எனது ஆசையை சமர்ப்பிக்கிறேன்.
வருடா வருடம் 40 ஹதீதுகள் என்றால் இந்த 90 ஆண்டுகளில் 3600 ஹதீதுகள் வெளிவந்திருக்கும். இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு தொடங்கி வைத்தால் வரும் காலங்களில் எல்லா வீடுகளிலும் நபி மொழி 40 ஒளி வீசி மணம் பரப்பும். அல்லாஹ் அதற்கான எல்லா வசதிகளையும் தந்தருள்வானாக.
எதை கேட்டோமோ அதை வாழ்வில் எடுத்து நடக்கும் நல்ல பாக்கியத்தையும் நமக்கு வழங்கி அருள்புரிவானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross