Re:...காவலர் தினமும் காதலர் தினமும் posted bymackie noohuthambi (colombo)[31 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45394
நான் கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கிறேன்.
தம்மாம் காயல்நலமன்றத்தில் செயலாளராக பதவி வகித்த காலம் அது. ரியாத்தில் காயல் அல்லயன்ஸ் கமிட்டியில் துணை தலைவராக நான் தேர்ந்தெடுக்கப் பட்ட காலம் அது.
இந்த இரண்டு அமைப்பிலும் பொதுக் குழு செயற்குழு கூடும் கருத்துக் பரிமாற்றங்கள், கருத்து வேறுபாடுகள் வெளிப்படும். ஆனால் நிகழ்ச்சி முடியும்போது ஒத்த கருத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு அவை அமுலுக்கு வரும்.
ஆனால் இப்படி பூங்காக்களில் பகிரங்கமாக கூட முடியாது, பெண்கள் கலந்து கொள்ள முடியாது. இரும்பு திரை என்பார்களே அப்படி ஒரு சர்வாதிகார ஆட்சியில் நடக்கும் கூட்டம்போல்தான் இருக்கும். சத்தமும் வெளியே கேட்கக் கூடாது.
ஒரு கிளிக்கூடு அங்கே ஒரு கிளி அதற்கு நினைத்த நேரம் சாப்பாடு கனி வர்க்கங்கள் கொஞ்சுதல் குலாவுதல் எல்லாமே இருக்கும். இதை பார்த்த காகத்துக்கு பொறாமை. நாம் காலையில் புறப்பட்டு வெளியே சென்று அலைந்து திரிந்து உணவு பெற்று காலத்தை கழிக்கிறோம். கிளி எவ்வளவு சுகமாக இருக்கிறது. நினைத்த நேரம் சாப்பாடு இருந்த இடத்திலேயே எல்லாம் கிடைக்கிறது..கிளியிடம் வாய் திறந்து கேட்டு விட்டது. கிளி படும் அவஸ்தை கிளிக்குத்தானே தெரியும். அப்படியா இன்று முதல் நீ இந்த கூட்டுக்குள் இருந்து சுகம் அனுபவித்துக் கொள். நான் வெளியே போகிறேன் என்று புறப்பட்டு விட்டது. இப்போது காகம் இரண்டொரு நாள் சுகமாக இருந்தது. ஆனால் வெளியே சுதந்திரமாக பறக்க முடியவில்லை. தென்றல் காற்றை அனுபவிக்க முடியவில்லை, விதவிதமாக உணவுகள் சாப்பிட முடியவில்லை. தன உறவுகளை அழைத்துக் கொண்டு கூட்டமாக சாப்பிட முடியவில்லை. இப்போது மண்டையில் உரைத்தது. ஆயிரம் இருந்தும் no peace of mind . கிளியை அவசரமாக கூப்பிட்டது. இங்கே வா, என்னால் இப்படி கூட்டுக்குள் அடைந்து கிடைக்க முடியாது. சுதந்திரமாக பறந்து திரிந்து இரை தேடுவது, கூட்டம் குடும்பமாக இருப்பது அவர்களுடன் சேர்ந்து உண்பது, நினைத்த நேரம் கூட்டுக்கு வருவது, நினைத்த நேரம் போவது...இப்படி சுதந்திர காற்றை சுவாசித்தவன் நான் ..ஏற்றது. கிளி சிரித்தது. இறைவன் உனக்கு தந்துள்ள சுதந்திரத்தை நினைத்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் என்னை பார்த்து ஏன் பொறாமை பட்டாய்...
இப்போது விஷயத்துக்கு வருகிறேன். இன்றும் கூட அந்த சுதந்திர உணர்வு எனக்கு இருக்கிறது. துபாயில் இன்று நடக்கும் காவலர் தினம் உண்மையான காதலர் தினம். கணவன் மனைவி மீது காதல் மனைவி கணவன் மீது காதல் தந்தை அவர்கள் மக்கள் மீது காதல். இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு துபாய் மீதே ஒரு காதல் ஏற்படும் அளவுக்கு மிக விமரிசையாக கொண்டாடுவதை மானசீகமாக உணர்கிறேன். அதுவும் நமதூர் மக்களுக்கு எப்படி எல்லாம் உதவலாம் என்று அவர்கள் மீது உள்ள காதல்.
இறைவன் நமக்கொரு காதல் கடிதம் எழுதினான். அதுதான் திருமறை. அதை கொண்டு வந்தவர்தான் நபிகள் நாதர். காதலிக்க தெரியாத கசடர்கள் நாம் என்று காதலிக்கவும் கற்று தந்தார்கள்.
எனவே காதலர் தினமும் காயலர் தினமும் ஒன்றே. அர்த்தங்களை அனர்த்தங்களாக மாற்றுபவர்கள்தான் அதை கொச்சை படுத்திக்க கொண்டிருக்கிறார்கள்.கலாச்சார சீரழிவை ஏற்படுத்திக் கொண்டு சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். .
காயலர் தினம் ஒரு புதிய தலைமுறையின் சங்கமம்.
இளைய தலைமுறையையும் முதிய தலைமுறையினையினரையும் இணைக்கும் பாலம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross