Re:...மர்ஹபா மர்ஹபா... posted bymackie noohuthambi (colombo)[08 April 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45446
அல்லாஹ்வின் திருமறை வசனங்களை ஓதிடக் கேட்கும் போது செவிகளுக்கு அவை விருந்தாக இருக்கின்றன. இலங்கையிலே அந்த கொடுப்பினை ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும். நாங்கள் தொழுகும் வெள்ளவத்தை பள்ளியிலும் சரி மற்றும் எந்த பள்ளிக்கு போனாலும் அங்கு ஒலிக்கும் இமாம் அவர்களின் சிம்மக் குரல் இன்னும் ஓத மாட்டார்களா என்று ஏங்க வைக்கிறது. அதுவும் அர்த்தம் தெரிந்தவர்களுக்கு அது இன்னும் சிறப்பாக இருக்கிறது..
ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் நமதூரின் வரைபடத்தை இமயத்தின் சிகரத்துக்கு கொண்டு சென்றுள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதன் ஆசிரியர் பெருந்தகை பாதுல் அஸ்ஹப் ஆலிம் அவர்களின் பேத்தி இந்த பெருமைக்குரிய விருதுகளை குவித்திருப்பது ஆலிம் அவர்களுக்கும் அவர்களின் தந்தை சாவன்னா ஆலிம் அவர்களுக்கும் சிறப்பு சேர்க்கிறது.
அந்த திருமறை செல்வியை பெற்றெடுத்த பெற்றோருக்கும் எனது சகோதரர் பீர் முஹம்மது காக்கா அவர்கள் குடும்பத்துக்கும் அணி சேர்க்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக நாளை மறுமையில் நீங்கள் ஓதிக் கொண்டே செல்லுங்கள் எங்கே நிறுத்துகிறீர்களோ அதுதான் உங்கள் சுவர்க்கத்தின் எல்லை என்று மணிமகுடம் சூட்டப்படும். அவர்களின் பெற்றோர்களும் அத்தகைய கண்ணியங்களை பெறுவார்கள் என்ற நபி மொழி செய்தி நமக்கெல்லாம் உவகை தருகிறது.
எங்கள் நினைவில் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் அவர்களுக்கு இப்படி ஒரு ஆசை. வீட்டில் வளரும் பிள்ளைகள் என்னவாகிறார்கள் என்பது பிரச்சினை இல்லை ஆனால் அவர்கள் ஒரு ஹாபிளாக இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவார்கள். அவர்கள் மக்கள் மருமகன் பேர பிள்ளைகள் எல்லோருமே அந்த ஆசைகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். அதற்கு ஹாமிதிய்யா உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது பெண் மக்கள் வரிசையும் இணைகிறது. எனது பாசத்துக்குரிய ஆண் மக்களும் பெண் மகளும் அந்த வரிசையில் தடம் பதித்திருக்கிறார்கள் என்பது மனதுக்கு இதம் தருகிறது.
வருடா வருடம் நான் வழங்கி வரும் ''மக்கி ஆலிம் நினைவுப் பரிசுக்கு'' முதல் பெண்மணியாக சிறப்பு பரிசு பெறுவதற்கு நாங்கள் எங்கள் பிள்ளையை சார்ஜோன் அவர்கள் மகளை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்ற நல்ல செய்தியையும் இங்கு பதிவு செய்கிறேன்.
அல்லாஹ் இந்த சகோதரிக்கு நல்ல குரல் வளத்தையும் மன வளத்தையும் குர் ஆன் ஞானத்தை மென் மேலும் விளங்கி அதன்படி அமல் செய்யும் நற்பாக்கியத்தையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross