இனிய நண்பா! posted byS.K.Salih (Kayalpatnam)[29 April 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45499
என் இனிய நண்பனே...
ஓரிரு நாட்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் நீ என்னைத் தாண்டிச் சென்றபோது, இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கும் என்று கொஞ்சம் கூட நினைப்பு வரவில்லையே...? இவ்வளவு வேகமாகப் பிரிந்துவிட்டாயே...?
திருமணத்திற்கு முந்தைய பருவம் தொட்டு, நண்பர்களாக நாம் சுற்றித் திரிந்த பயணங்களெல்லாம் இன்று என் மனக்கண் முன் வந்து நிழலாடுகின்றன.
உன் வஃபாத் செய்தி கேட்டுப் பேரதிர்ச்சியடைந்தேன். என்ன செய்ய? இறைவனின் நாட்டம் அது எனில், கண்டிப்பாக அதில் நன்மைதான் இருக்கும் என்று நல்லெண்ணம் வைக்கிறேன்.
வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.
அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...
மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் அவரது சகோதரர்களான என் அன்பு மூஸா நெய்னா காக்கா, முஹம்மத் தம்பி காக்கா, பஷீர் காக்கா, நண்பன் ஃபைஸல் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.
துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross