Re:...முத்தமிழின் முகவரி தந்த புதுக் கவிதையின் முகவர் posted bymackie noohuthambi (kayalpatnam )[04 June 2017] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45593
அது இரண்டாவது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு. ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அரங்கேறிய அந்த மாநாட்டில் மர்ஹூம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு காயல்பட்டினத்தில் சிறப்பை பாடினார்கள்.
காயல்பட்டினம் எங்கள் இஸ்லாமிய இன்சுவை சமையலில் உப்பு சேர்த்த கலைநகரம்.
இங்கே கிடப்பது புழுதியல்ல மக்கமா மலரின் மகரந்த பொடிகள்.
இங்கே ஏறல் எழுத்திலும் இறைமறை இருக்கும்
மழலைகள் வாயும் ஹதீதுகள் பேசும்.
நாமெல்லாம் யார் பீரப்பாவின் பேரப்பிள்ளைகள். சேகுத்தம்பியின் சின்னத்தம்பிகள்.
காயல்பட்டினத்தில் காலெடுத்து வைத்தால் கல்லும் கூட கவிபாடும் கவிஞர்கள் வந்திருக்கிறோம் காவியங்கள் பிறக்காதோ....
நபிகள் நாயகத்தை பற்றி அவர்கள் கவிதை வடித்தபோது ..''எழுதப் படிக்க செல்லாத இந்த உம்மி நபியிடம்தான் பள்ளிக் கூடங்கள் பாடம் பயின்றன''..என்று சொன்னபோது பார்வையாளர் வரிசையிலிருந்து ஒருவர்..''.பல்கலைக் கழகங்கள் பாடம் பயின்றன'' என்று திருத்திக் கொடுத்தார். அப்போது கவிஞர் சொன்னார்... நான் பள்ளிக் கூடத்திலிருந்து ஆரம்பிக்க நினைத்தேன் நீங்கள் பல்கலைக் கழகத்திலிருந்து ஆரம்பிக்க சொல்கிறீர்கள்..நன்றி என்று சொல்லி. என் கவிதையை சாதாரணமான நீங்கள்தி ருத்துவதா என்று இறுமாப்பு கொள்ளாமல் அவை அடக்கத்துடன் அதை ஏற்றுக் கொண்ட அவரது நற்குணத்தை எண்ணி பார்க்கிறேன்.
''வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது
வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால்
அப்துல் ரஹ்மானை தருக என்பேன்'' என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சொல்வார். அவரைத்தான் முத்தமிழின் முகவரி என்று கவிக்கோ பாடினார். புதுக் கவிதைகளின் முகவரி கவிக்கோ அப்துல் ரஹ்மான்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை பொருந்திக் கொள்வானாக அவர்களது குறைகளை மன்னிப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை அளிப்பானாக என்று இந்த புனித ரமலானில் அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.
இலக்கியம் ஒரு கவிதையை இழந்து விட்டது என்று கவிஞர் வைரமுத்து புகழ் அஞ்சலி செலுத்தி இருப்பதை இங்கு நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
''வேலிக்கு வெளியே என் கிளைகளை வெட்டிய தோட்டக் காரனே வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்'?
கேட்டவர் கவிக்கோ
தோட்டக் காரன் பதில் சொல்லுமுன் அந்த வேர்களை நழுவ விட்ட இறைவனை சென்றடைந்து விட்டீர்கள். அந்த கேள்விக்கு பதில் அல்லாஹ் என்பதை தவிர வேறென்ன இருக்க முடியும் கவிஞரே...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross