செய்தி: தனியார் பேருந்துகளையும் சேர்த்து 367 பேருந்துகள் 24 மணி நேர கண்காணிப்பில் காயல்பட்டினம் வழியாக சென்றன! அரசுப் பேருந்துகள் வருகை முன்பை விட குறைவு!! “நடப்பது என்ன?” குழும ஆய்வு தகவல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byVilack sma (jeddah)[07 June 2017] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 45595
பேரூந்துகள் வழி மாறி செல்வது நமதூருக்கு தீராத பிரச்சினையாகவே உள்ளது . பேரூந்துகள் செல்லும் ஒருவழிப்பாதையில் முறையற்ற வகையில் வாகனங்கள் நிறுத்தி பேரூந்து செல்ல இடைஞ்சல் ஏற்படுத்துவது முக்கிய காரணம் . பேரூந்து ஓட்டுநர்களும் இதையே எத்தனை காலத்திற்கு சொல்லி கொண்டிருப்பது ? ஓட்டுனர்கள் " மனம் மாறி " தடம் புரண்டு செல்ல முக்கிய காரணம் , அடைக்கலாபுரம் வழி சுலபமாக உள்ளதுதான் . அதற்காக நமதூர் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்ட பேரூந்துகள் , நமதூரை புறக்கணிக்க எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
கண்காணிப்பு குழுக்கள் நமதூர் பேரூந்து நிலையத்தில் இருந்துகொண்டு கண்காணிப்பது உபயோகம் இல்லை என்பது பேரூந்து வரத்துகள் குறைந்ததில் இருந்து தெரிய வருகிறது .
இரண்டு குழுக்கள் , ஒன்று வீரபாண்டியன் பட்டினம் அடைக்கலாபுரம் சந்திப்பிலும் மற்றொன்று ஆறுமுகநேரி சந்திப்பிலும் ,நமதூருக்கு பெர்மிட் வழங்கப்பட்ட பேருந்துகளின் எண்களை வைத்துக்கொண்டு கண்காணித்தால் ஓரளவு பயன் அளிக்கும் என்று நினைக்கிறேன் . " நடப்பது என்ன " இதை கொஞ்சம் யோசித்து பாருங்களேன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross