தனியார் பேருந்துகளையும் சேர்த்து 367 பேருந்துகள் 24 மணி நேர கண்காணிப்பில் காயல்பட்டினம் வழித்தடத்தில் சென்றுள்ளதாகவும், அரசுப் பேருந்துகள் வருகை முன்பை விட குறைவாக உள்ளதாகவும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் - காயல்பட்டினம் வழியினை புறக்கணித்து வருவது குறித்து கடந்த ஜூன் மாதம் முதல் - நடப்பது என்ன? குழுமம் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றின் பலன் குறித்து அறிந்திட - கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில், நடப்பது என்ன? குழுமத்தின் தன்னார்வர்கள் மூலம் - 24 மணி நேர கண்காணிப்பு நடத்தப்பட்டது.
அதில் - காயல்பட்டினம் வழியாக 321 பேருந்துகள் செல்வது கண்டறியப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் தனியார் பேருந்துகள் இடம்பெறவில்லை.
சமீப போராட்டங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையை விட இது அதிகமென்றாலும், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டிய பேருந்துகளின் மொத்த எண்ணிக்கையில் இது மிகவும் குறைவு.
ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பினை தொடர்ந்து, இது குறித்த விரிவான அறிக்கை - சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை செயலர் திரு சந்திரகாந்த் காம்ப்ளே IAS நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
காயல்பட்டினம் வழியாக செல்லும் பேருந்துகள் குறித்த இரண்டாவது, 24 மணி நேரம் கண்காணிப்பு - நேற்று (மே 25) காலை 8:55 மணிக்கு துவக்கப்பட்டு, இன்று (மே 26) காலை 9:30 மணி வரை - நடப்பது என்ன? குழும தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது.
அதன் முடிவில் - ஜனவரி மாதம் கணக்கெடுப்பில் இருந்த பேருந்துகளின் எண்ணிக்கையை விட, தற்போது பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது.
திருநெல்வேலி கழகம் பேருந்துகள்
-- தற்போதைய கண்காணிப்பு எண்ணிக்கை : 212
-- ஜனவரி மாத கண்காணிப்பு எண்ணிக்கை : 246
------ கடைசி கண்காணிப்பை விட 34 பேருந்துகள் குறைவு
மதுரை கழகம் பேருந்துகள்
-- தற்போதைய கண்காணிப்பு எண்ணிக்கை : 17
-- ஜனவரி மாத கண்காணிப்பு எண்ணிக்கை : 34
------ கடைசி கண்காணிப்பை விட 17 பேருந்துகள் குறைவு
கும்பகோணம் கழகம் பேருந்துகள்
-- தற்போதைய கண்காணிப்பு எண்ணிக்கை : 26
-- ஜனவரி மாத கண்காணிப்பு எண்ணிக்கை : 27
------ கடைசி கண்காணிப்பை விட 1 பேருந்துகள் குறைவு
கோவை கழகம் பேருந்துகள்
-- தற்போதைய கண்காணிப்பு எண்ணிக்கை : 5
-- ஜனவரி மாத கண்காணிப்பு எண்ணிக்கை : 7
------ கடைசி கண்காணிப்பை விட 2 பேருந்துகள் குறைவு
தனியார் பேருந்துகள்
-- தற்போதைய கண்காணிப்பு எண்ணிக்கை : 106
-- ஜனவரி மாத கண்காணிப்பு எண்ணிக்கை : கண்காணிக்கப்படவில்லை
பேருந்து நிலையம் வெளியே சென்றதால் விபரம் அறிய முடியாது பேருந்துகள் - 1 (ஜனவரி மாதம் கண்காணிப்பு எண்ணிக்கை - 7)
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: மே 26. 2017; 10:45 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|