தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்ட ரவிக்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை நில அளவை துறை இயக்குனராக பணியிடம் மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக நிதித் துறை துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் திங்களன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக (5ம்தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவர்.
ஆட்சியர் வெங்கடேஷ் (வயது 35) - கடந்த 2009ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார். 2010 ல் மதுரையில் உதவி ஆட்சியராக பணியாற்றினார்.2011 லிருந்து 2012 ம் ஆண்டு வரை நாகர்கோவிலில் உதவி ஆட்சியராக பணியாற்றியவர், 2012-13 ல் கூடுதல் ஆட்சியராக கோயம்புத்தூரில் பணியாற்றினார்.
2013ம் ஆண்டு முதல் இதுவரை நிதித்துறை துணை செயலாளராக இருந்தார். 2015 லிருந்து 2016, 2016 லிருந்து 2017 வரையிலான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை கவனித்தவர்.
பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது,
தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி செயல்படுத்தப்படும். தண்ணீர் பிரச்சனை குறித்தும் ஆய்வு நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.ஆட்சியர் பொறுப்பேற்பின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன்,மக்கள் தொடர்பு அதிகாரி நவாஸ்கான் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தகவல்:
www.tutyonline.com
|