பொதுநலப் பணிகளுக்காக ஆண்டொன்றுக்கு 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதியொதுக்கீடு செய்வதென, காயல்பட்டினம் – சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் மாதாந்திர கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெருங்கிருபையால் கேசிஜிசி யின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் 04-06-2017 ரமலான் மாதம் 7-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் ரோடு எஸ்கே பில்டிங்ஸில் வைத்து நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்திற்கு சகோ. இப்னு சவூத் அவர்கள் தலைமை தாங்கினார். சகோ. ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் கிராஅத் ஓதினார். கூட்டத்தில் பேசப்பட்ட பொருள்கள் பின்வருமாறு:
1. கேசிஜிசி யின் கடந்தகால செயல்பாடுகள் மீளாய்வு.
2. கேசிஜிசி யின் ரூ.1,600 மதிப்பிலான நோன்பு கால மளிகை பொருட்கள் அடங்கிய கிட்.
3. கே.சி.ஜி.சி சார்பாக ஷிஃபா அமப்பிற்க்கான செயற்குழு உறுப்பினர் தேர்வு.
4. காயல்பட்டணம் பள்ளிகளின் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கான அனுசரணை.
5. இக்ராவுடன் கேசிஜிசி யின் உறவுகள்.
6. கேசிஜிசி யின் அடுத்தகட்ட செயல்பாடுகள்.
7. ஊரில் உள்ள பொதுநல அமைப்புகளுக்கான உதவிகள்.
கேசிஜிசி யின் கடந்தகால செயல்பாடுகள் மீளாய்வு:-
கேசிஜிசி யின் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவுகள் குறித்த ஆண்டறிக்கைக்கான கணக்குகளை தயாரித்து வழங்க சகோதரர்கள் சொளுக்கு முஹம்மத் நூஹ், ஷமீமுல் இஸ்லாம் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டது.
கேசிஜிசி யின் ரூ.1,600 மதிப்பிலான நோன்பு கால மளிகை பொருட்கள் அடங்கிய கிட்:-
இன்ஷா அல்லாஹ் கேசிஜிசி உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையிலிருந்து ரூ.1,600 மதிப்பிலான நோன்பு கால மளிகை பொருட்கள் அடங்கிய கிட் காயல்பட்டணத்தின் அனைத்து பள்ளிவாசல்களின் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
ஷிஃபா செயற்குழு உறுப்பினர் தேர்வு:-
ஷிஃபா அமைப்பின் கேசிஜிசி செயற்குழு உறுப்பினராக இருந்துவந்த சகோ. எம்.எம்.செய்யத் இப்ராஹீம் அவர்கள் தனது பணி நிமித்தமாக வெளிநாடு செல்வதால் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு அப்பொறுப்பை இனிமேல் சகோ.ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் மேற்கொள்வார் என முடிவு செய்யப்பட்டது.
ஷிஃபாவின் மக்கள் மருந்தகம் பற்றிய செயல்பாடுகள் குறித்து ஆடிட்டர் ரிஃபாய் அவர்களும் சகோ.ஷமீமுல் இஸ்லாம் அவர்களும் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதனடிப்படையில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை ஷிஃபாவின் செயற்குழுவில் கேசிஜிசி யின் புதிய செயற்குழு உறுப்பினர் தெரிவிக்க வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்தது.
இமாம், முஅத்தின்களுக்கான அனுசரணை:-
இமாம் முஅத்தின்களுக்கான ரமலான் கால அனுசரணை வழங்களில் கேசிஜிசி உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து ரூ.1,600 மதிப்பிலான நோன்பு கால மளிகை பொருட்கள் அடங்கிய இஃப்தார் கிட் காயல்பட்டணத்தின் அனைத்து பள்ளிவாசல்களின் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு இன்ஷா அல்லாஹ் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.
இக்ராவுடன் கேசிஜிசி யின் உறவுகள்:-
கேசிஜிசி யின் செயற்குழு உறுப்பினரான சகோ.முஹம்மது தம்பி குளம் இக்ராவின் இவ்வாண்டு செயற்குழுவிற்கு தனிப்பட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு அவருக்கு செயற்குழு பாராட்டுகளை தெரிவித்தது. மேலும் இக்ராவின் கல்விச்செயல்பாடுகளின் பொரளாதார தேவைகளில் கேசிஜிசி பங்கெடுக்க வேண்டுமென இக்கூட்டம் முடிவு செய்தது. வருடத்திற்கு ஒருமுறை இப்பங்களிப்பை வழங்கவேண்டுமெனவும் முடிவெடுக்கப்பட்டது.
கேசிஜிசி யின் செயற்குழுவிலிருந்து ஓர் உறுப்பினர் இக்ராவின் செயற்குழுவிற்கு தேர்ந்தேடுக்கப்படுவதற்காக இக்ராவை முறைப்படி அணுகவேண்டும் எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கேசிஜிசி யின் அடுத்தகட்ட செயல்பாடுகள்:-
நோன்பு திறக்கும் நேரம் நெருங்கிவிட்ட படியால் கேசிஜிசி யின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து அடுத்த கூட்டத்தில் பேசுவதென இக்கூட்டம் .
ஊரில் உள்ள பொதுநல அமைப்புகளுக்கான உதவிகள்:-
நமதூரில் செயல்பட்டுவரும் பொதுநல அமைப்புகளான இக்ரா, ஷிஃபா, தஃவா சென்டர், ஐ.ஐ.எம் பைத்துல்மால், காயல்பட்டணம் பைத்துல்மால், துளிர் அறக்கட்டளை, கே.எம்.டி மருத்துவமனை, இமாம் மற்றும் முஅத்தின் நல நிதி ஆகிய 8 அமைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் உறுப்பினர்களிடமிருந்தும், நலன்விரும்பிகளிடமிருந்தும் பெறப்படும் ஜகாத், சதக்கா தொகையை தலா ரூ.25000/- ற்கு குறையாமல் அவ்வமைப்புகளுக்கு வழங்குவதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதியாக துஆ கஃப்ஃபாராவுடன் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது. இக்கூட்டத்தில், சகோதரர்களான எஸ்.இப்னு ஸஊத், குளம் இப்றாஹீம், குளம் முஹம்மத் தம்பி, ஆடிட்டர் அஹ்மத் ரிஃபாய், எச்.என்.ஸதக்கத்துல்லாஹ், சித்தீக், எம்.இ.ஷேக், சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், வழக்குரைஞர் எல்.எஸ்.எம்.ஹஸன் ஃபைஸல், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எண்ணங்களை தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம் யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|