சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றத்தின் 54ஆவது பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. அதில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அரும்பெரும் கிருபையினால் எமது RKWA-ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் 54-வது பொதுக்குழுக் கூட்டம் 02/06/2017 வெள்ளிக்கிழமையன்று இந்த புனித ரமழான் மாதத்தில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் ஃபத்ஹா Shifa Al Jaseera Polyclinic Party Hall-ல் நடைபெற்றது.
இஃப்தார் நிகழ்ச்சியில், சுவை மிகுந்த காயல் கறி கஞ்சி, பருப்பு வடை, கறி ரோல், fruit salad, குளிர் பானங்கள், மற்றும் தேனீர் பரிமாறப்பட்டன.
அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7:15 மணியளவில் மன்ற பொது குழு கூட்டம் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியை மன்ற ஆலோசனை குழு உறுப்பினரான M.E.L. செய்யிது அஹ்மது நுஸ்கி அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள்.
சகோதரர் ஹாபிழ் அஹ்மத் தாஹிர் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, வந்தோரை அகமகிழ்வோடு சகோதரர் நயீமுல்லாஹ் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்ப்புரை ஆற்றினார்.
அடுத்து மன்ற உறுப்பினர் இன்னிசைத்தென்றல் சகோதரர். ஷேக் அப்துல் காதர் அவர்கள் இனிமையான இஸ்லாமிய பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
மன்ற செயல்பாடுகள் மற்றும் தொகுப்புரை...
மன்றத்தின் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹ் அவர்கள் இம்மன்றம் இத்தனை வருடம் சிறப்பான முறையில் செயல்பட காரணம் மன்றத்தின் நிர்வாக குழு, மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒற்றுமையே என்று வலியுறுத்தி பேசினார். மேலும் அவர் பேசுகையில் நம் ஊரில் இருந்து நமது முகவர் மூலம் வழிப்பு (fits) நோயால் பாதிக்கப்பட்டவரின் வீடியோவை பார்த்து மனம் நெகிழ்ந்ததை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான சேமிப்பு உண்டியல் திட்டத்தை WAKF (Women and Kids Fund) அடுத்த பொது குழுவில் முறை படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
2016 ஆம் ஆண்டின் மன்றத்தின் திட்ட ஒதுக்கீடு மற்றும் செயல் திட்டத்தை சகோதரர் முஹ்ஸின் அவர்கள் நம் திட்டம் இதுவரை மருத்துவம், கல்வி, சிறு தொழில் மற்றும் பிற சேவைகளுக்காக உதவி அளித்ததை முறையாக பட்டியலிட்டார்.
மேலும் சென்ற வருடம் ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களுக்கு மற்றும் முஆத்தின் உதவி தொகை போன்ற நன்மையான காரியங்களில் மற்ற காயல் அமைப்புகளுடன் நம் அமைப்பு சேர்ந்து செயல்பட்டு வருவதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் இந்த புனித ரமழான் மாதத்தில் வழியவர்களில் கிட்டத்தட்ட 226 நபர்களுக்கு ஒரு மாத உணவு பொருட்கள் வழங்கப்பட்டதையும் இது போன்ற அனைத்து நன்மையான காரியங்களில் நம் மன்ற ஊர் பிரதிநிதி சகோதரர் தர்வேஸ் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் புகழ்ந்துரைத்தார்.
பின்னர் ஊரிலிருந்து குறைந்த பொருள் செலவில் வீடு கட்டித் தருமாறு வறுமை நிலையில் குடிசை வீட்டில் வாழும் நம் சொந்தங்களின் கருணை மடலை சகோதரர் நுஸ்கி அவர்கள் வாசித்து காட்டினார்கள்.
அதனை தொடர்ந்து சகோதரர் கூஸ் அபுபக்கர் அவர்கள் பொது தொண்டு என்ற தலைப்பில் மிகவும் அழகாக முறையில் இன்றைய காலத்தில் நம்மிடம் நடக்கும் நடப்புகளை நம் கண்முன்னே கொண்டு வரும் அளவுக்கு உதவி செய்வதை பற்றி ஹதீஸ் அடிப்படையில் பேசினார்கள்.
உதவி செய்ய நினைத்தோம் என்றால் அதை காலம் தாழ்த்தாமலும் வழியவர்களின் தேவையை முழமை படுத்துமாறும் நாமாக முன் வந்து உதவி செய்வதுதான் சிறந்தது என்றும் கேட்டுக் கொண்டார். அதற்காக RKWA செயல்படுவதாகவும் கூறினார்.
அதனை தொடந்து ஐயம்பேட்டை சகோதரர் பக்கீர் மொய்தீன் அவர்களின் இனிய குரலில் இஸ்லாமிய பாடல் ஒன்றும் மற்றும் நம் மன்ற உறுப்பினர் சகோதரர் லால்பேட்டை முஹம்மது நாஸர் அவர்களின் சிறப்புரையும் இக் கூட்டத்திற்கு வலிமை சேர்த்தது.
அதனை தொடர்ந்து ஜெத்தா நல மன்றத்தின் பொருளாளர் சகோதரர் ஆதம் தனது சிறப்புரையில் RKWA எங்களுக்கு சில நேரங்களில் முண்ணோடியாக இருந்துள்ளதாகவும் பொது தொண்டில் நாம் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொள்வது நன்மைதான் என்றும் கூறினார்.
சகோதரர் இர்ஸாத் நன்றியுரையை தொடர்ந்து சகோதரர் ஜெய்னுல் ஆபிதீன் துஆவுக்கு பின் வந்த அனைத்து சகோதரர்களும் ஒருங்கிணைந்து குழுப்படம் எடுக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அனைத்து படங்களையும் காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்
https://goo.gl/photos/gpEMJbbojfpCn66S8
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியாதிலிருந்து...
தகவல் & படங்கள்:
M.N.முஹம்மத் ஹஸன்
|