கர்நாடக மாநிலம் பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், நிகழும் ஜூன் மாதம் 10ஆம் நாளன்று, இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள - மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, மன்றத் தலைவர் ‘ஹனீவெல் இப்றாஹீம்’ வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெங்களூரு வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், இன்ஷாஅல்லாஹ் வரும் 10.06.2017. ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் மாலை 04.30 மணியளவில், நமது மன்றத்தின் சார்பில், Bengaluru - M.G.Road - No.18, Primerose Road என்ற முகவரியிலுள்ள - மர்ஹூம் ஹாஜி ஆடிட்டர் புகாரீ அவர்களின் நிறுவன அலுவலகத்தில், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியும், பொதுக்குழுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும், பெங்களூருக்கு புதிதாக வந்திருக்கும் காயலர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களும், இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, தங்கள் குடும்பத்தினருடன் குறித்த நேரத்தில் இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
கருணையுள்ள ரஹ்மான் இந்த சங்கை மிகுந்த ரமழானின் பொருட்டால், நமது பாவங்களை மன்னித்து ஈருலக நன்மைகளைத் தந்தருள்வானாக ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
பெங்களூருவிலிருந்து...
P.S.A.S.ஜெய்த் நூருத்தீன்
|