தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ள என்.வெங்கடேசனுடன், காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் சந்தத்து, கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத குருசடி, ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கடற்கரை சாலை, மின்னிணைப்பு, கேபிள் டீவி சந்தா தொகை உள்ளிட்டவை குறித்து மனுக்களை அளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தின் *புதிய ஆட்சியராக திரு என்.வெங்கடேசன் IAS* நேற்று (ஜூன் 5) பொறுப்பேற்றார். நடப்பது என்ன? குழுமம் சார்பாக அதன் அங்கத்தினர் இன்று ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, நகர் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து மனுக்கள் வழங்கினர்.
========
*வாழ்த்து*
========
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக, தமிழக அரசின் நிதித்துறையின் துணை செயலராக பணியாற்றி வந்த திரு என்.வெங்கடேசன் IAS - கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட *மாவட்ட ஆட்சியரை, மரியாதை நிமித்தமாக - நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.*
=====================
*குருசடி தொடர்பான மனுக்கள்*
=====================
காயல்பட்டினம் கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, _சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள குருசடியை அப்புறப்படுவது குறித்தும், சட்டத்திற்கு புறம்பாக மின்வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள மின்னிணைப்பை துண்டிக்க பெறப்பட்டுள்ள நீதிமன்ற தடையை நீக்கிட துரித நடவடிக்கை எடுக்க கோரியும், மீன்வளத்துறை மூலம் சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்த கோரியும், கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, கொம்புத்துறை வரை - புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களையும்_ அப்புறப்படுத்தக்கோரியும் மனுக்கள் வழங்கப்பட்டன.
=======================
*கேபிள் தொலைக்காட்சி கட்டணம்*
=======================
கேபிள் தொலைகாட்சி மாத கட்டணம் - ரூபாய் 70 என அரசு நிர்ணயம் செய்துள்ளது. இருப்பினும் நகரில் இதற்கு அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. பெறப்படும் தொகைக்கு முழுமையான ரசீது வழங்க மறுக்கப்படுகிறது. அதிக கட்டணம் தர மறுப்பவர்களின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. சந்தாதாரர்களுக்கு என எந்த அடையாள அட்டையோ, பிரத்தியோக எண்ணோ வழங்கப்படுவதில்லை. இது சம்பந்தமான *அதிகாரிகளிடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது சம்பந்தமாக விசாரணை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.*
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: ஜூன் 6, 2017; 9:45 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|