ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்றத்தின் 10-ஆவது பொதுக்குழுக் கூட்டம், இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றுள்ளது. அதில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த அம்மன்றத்தின் செய்தியறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 10-ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 8ஆம் நாளன்று , வியாழக்கிழமை) 18.00 மணியளவில், அபூதபீ ஸலாம் தெரு, அரபு உடுப்பி" [ARAB UDUPI]யின் 7ஆவது மாடியில் அமைந்துள்ள பேன்குவெட் ஹாலில் " [Banquet Hall] மன்றத் தலைவர் எஸ்.டி.ஷேக்னா லெப்பை தலைமையில், கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் ,பொதுச் செயலாளர்: எம்.மக்பூல் அஹ்மத் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி அய்மான் மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அபுதாபி அய்மான் சங்கத்தலைவர் புரவலர் ஷம்சுதீன் ஹாஜியார் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார்கள்.
இஃப்தார் நிகழ்ச்சியில், சுவை மிகுந்த காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி கறிகஞ்சி, பழ வகைகள், வடை,இளநீர் கடற்பாசி , குளிர் பானங்கள், மற்றும் தேனீர் பரிமாறப்பட்டன.
அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7:30 மணியளவில் மன்ற 10- ஆவது பொது குழு கூட்டம் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள். இளவல் ஹபீப் ரஷாத் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க,
வரவேற்பு மற்றும் மன்றத்தலைவர் உரை:-
வந்தோரை அகமகிழ்வோடு மன்றத் தலைவர் எஸ்.டி.ஷேக்னா லெப்பை அவர்கள் அனைவரையும் வரவேற்று தனதுரையைத் துவக்கிய அவர், மன்றச் செயல்பாடுகளில் மன்றத்தின் நிர்வாக குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய ஈடுபாட்டைப் பாராட்டியும் - ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தியும் பேசினார் மேலும் அவர் பேசுகையில் ஊரில் இருந்து நமது துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் மூலம் மன்றத்தின் சார்பாக கொடுக்கப்பபடும் நோன்பு சமையல் பொருட்களை பெற்றுக்கொண்ட ஒரு மூதாட்டி நமக்காக இறைவனிடத்தில் துஆ செய்யும் வீடியோகாட்சியை பார்த்து மனம் நெகிழ்ந்ததை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
இவ்வாண்டு மன்றம் மற்றும் அனுசரணையாளர்களின் உதவியால் 114 குடும்பங்களுக்கு நோன்பு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்,உறுப்பினர்களின் தாராள உதவியால், நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், வறுமை நிலையிலிருக்கும் நமதூர் மக்களுக்கு உதவும் ரமழான் உணவுப் பொருள் வழங்கும் திட்டம், இக்ரா மூலம் ஏழை மாணவ /மாணவியருக்கான கல்வி உதவி திட்டம், ஷிஃபா மூலம் மருத்துவ உதவி போன்ற திட்டங்களை விவரித்து, அவற்றில் மன்றத்தின் பங்களிப்புகளையும் விளக்கினார்.
மன்றத்தின் வளர்ச்சி, உறுப்பினர்களின் ஒற்றுமை, சந்தா தொகையை நிலுவையின்றி செலுத்தல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியே அவரது உரை முழுக்க அமைந்திருந்தது.
சிறப்பழைப்பாளருக்கு பொன்னாடை :-
மன்றத்தின் கவுரவ தலைவர் அல்ஹாஜ் I. இம்தியாஸ் அஹ்மது, மன்றத்தின்தலைவர் ஜனாப் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை மற்றும் பொதுச் செயலாளர் எம்.மக்பூல் அஹ்மத் ஆகியோர்கள் சிறப்பழைப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கண்ணியப்படுத்தினர்.
சிறப்பழைப்பாளர் புரவலர் ஷம்சுதீன் ஹாஜியார் உரை :-
நோன்பின் மகத்துவத்தையும் ,அது ஒரு இறை கட்டளை என்று தமதுரையை துவங்கிய இவர் காயல்பட்டினத்தார் உதவி செய்வது இயற்ககையாகவே அவர்களின் உதிரத்தோடு கலந்த ஒன்று என்று நமதூர் மக்களை மெட்சிய இவர் குறைவில்லாமல் இம்மன்றம் சேவைப்பணியில் பிற அமைப்புகளுக்கு முன்னோடியாக ஒற்றுமையை கடை பிடித்து பல ஆண்டுகள் தொடரவும், தமக்கும் ,காயல்பட்டினத்திற்கும் நீண்ட நாட்களாக உள்ள தொடர்பை மெய்சிலிர்க்க உரைநிகழ்த்தி காயளராகவே பரிணமித்தார், தம்மை இந்த இப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்த அனைவர்களுக்கும் நன்றியும், வாழ்த்துக்களையும் கூறி விடை பெற்றார்.
ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ உரை:-
தொடர்ந்து மன்றப் செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் நமது அனைத்து கருமங்களும் நல்ல முறையில் அமைந்திட, நம் செல்வங்களை - நம்மோடு மட்டும் இருத்திக்கொள்ளாமல், பிறருக்கும் சென்றடையச் செய்ய வேண்டுமென்றும், நம்மைச் சார்ந்தோர் தமது இல்லாமை காரணமாக பிறரிடம் கையேந்தும் அவல நிலையைத் தவிர்த்திட, உரிய நேரத்தில் உடனுக்குடன் அவர்களுக்கு உதவுவது - தகுதியுடைய அனைவர் மீதுதும் கடமை என்றும், திருமறை குர்ஆன் வசனங்களிலிலிருந்தும், திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூய மொழிகளிலிருந்தும் மேற்கோள் காட்டிப் பேசினார்.மன்றம் தொடர்பான நிறை-குறைகள் மற்றும் ஆலோசனைகளை மன்ற நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்து ஆலோசனைகளை வழங்கும் படி கேட்டுக்கொண்டார்..
நன்றியுரை:-
மன்றத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் அவர்கள் இஃப்தார் மற்றும் பொதுக்குழ சிறப்பாக நடைபெற உதவி செய்த வல்ல இறைவனுக்கு முதலாவதாக நன்றியை தெரிவித்து மன்றத்தின் அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைவர்களுக்கும் ,சிறப்பு விருந்தினர்க்கும், இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்த இளவல் ஹபீப் ரஷாத்,பொதுக்குழு கூட்ட நிகழ்விடம், மற்றும் பொதுக்குழு இதர காரியங்களை சிறப்பாக்கி தந்த ஹாஜி I. இம்தியாஸ் அஹ்மத் அவர்கள், V.S.T. ஷேக்னா லெப்பை, M.O. அன்ஸாரீ ஆகியோர்களுக்கும், சந்தா தொகை வசூலித்த இணைப் பொருளாளர் நோனா அபூஹுரைரா மற்றும் இஸ்மாயில் ஆகியோர்களுக்கும், ரமழான் மாத உணவுப்பொருள் வழங்கும் திட்ட உதவி ,இமாம்-பிலால் ஊக்கத்தொகை அனுசரணை மற்றும் பயனீட்டாளர்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட மன்ற பொதுச்செயலாளர் மக்பூல் அஹ்மது அவர்களுக்கும்,பொதுக்குழு நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனைத்து உறுபினர்களுக்கும் மின்னஞ்சல் / குறுஞ்செய்தி (Email/SMS) வாட்சப் (WhatsApp), இணையதளங்களில் மூலம் தகவல் தெரிவித்து உறுப்பினர்களை ஒன்றிணைத்த மன்ற செயற்குழு உறுப்பினர்கள் PMSR ஷேக்னா, SE.மொஹைதீன், M.H.L.ஷேக் மற்றும் டாக்டர் விளக்கு S. செய்யித் அஹ்மத் ஆகியோர்களுக்கும்,
இஃப்தார்க்காக நோன்பு கஞ்சியை தம் இல்லங்களில் இருந்து சுவைபட தயாரித்து வழங்கிய ஜனாப் அல்ஹாஜ் I. இம்தியாஸ் காக்கா, ஜனாப் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை, ஜனாப் PMSR ஷேக்னா ஆகியோர்களுக்கும், சுவை மிகுந்த இளநீர் கடற்பாசி வழங்கிய இஸ்மாயில் அவர்களுக்கும், மிகச்சிறப்பாக அழகான முறையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதோடு இறுதியாக இறைவேண்டல் செய்த செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்களுக்கும், கூட்ட நிகழ்வுகளின் படங்களை வழமைபோல் தம் கேமரவால் அழகுபடுத்திடும் மன்ற துணைத்தலைவர் கேமராகவிஞர் சுப்ஹான் N.M.பீர் முஹம்மத் அவர்களுக்கும், மற்றும் இஃப்தார் பொதுக்குழ சிறப்பாக நடைபெற உதவி செய்த அனைவர்களுக்கும் மன்றதின் சார்பாக நன்றி தெரிவித்து அமர்ந்தார் .
கூட்ட நிறைவு:
பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்களும், குடும்பத்தினரும் திரளாகக் கலந்து சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இஃப்தார் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் https://goo.gl/photos/HkjmD7MCW2BUVgdt8 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
(துணைத் தலைவர்)
|