காயல்பட்டினம் உட்பட – தமிழகமெங்கும் அடுத்தடுத்து இரண்டு பருவ மழைகள் பொய்த்ததையடுத்து, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், வெப்பத்தின் தாக்கமும் தாங்க முடியாத அளவில் உள்ளது.
இவ்வாறிருக்க, நேற்று 15.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு, இடி முழக்கத்துடன் 15 நிமிடங்கள் இதமழை பெய்தது. இதன் காரணமாக நகரெங்கும் இதமான வானிலை நிலவுகிறது.
வழமை போல – லெப்பப்பா தர்ஹா அமைந்துள்ள சாலை உள்ளிட்ட சிமெண்ட் சாலைகளிலும், குத்துக்கல் தெரு உள்ளிட்ட தாழ்வான சாலைப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.
படங்களுள் உதவி:
M.M.ஃபவுஸ்
(புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்.)
|