காயல்பட்டினம் கடைப்பள்ளி கட்டிடம் சிதிலமடைந்து வந்ததைக் கருத்திற்கொண்டு, அப்பள்ளி நிர்வாகத்தால் புனர்நிர்மாணம் செய்யும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இங்கு தொழ வருவோருக்குத் தேவையான சகல வசதிகளுடன் இப்பள்ளிவாசல் விரைவில் கட்டி முடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என பள்ளி நிர்வாகம் கருதுகிறது.
பள்ளியின் புனர்நிர்மாணப் பணிகளுக்கான செலவினம் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:-
கழிப்பறை, குளியலறை கட்ட - ரூ. 5,00,000
மார்பில் கற்கள் கொள்முதல் – ரூ. 2,00,000
மார்பில் கற்கள் பதிப்புக் கூலி – ரூ. 1,22,000
மார்பில் கற்கள் பதிக்க இரண்டு லாரி மணல் – ரூ. 54,000
மார்பில் கற்கள் பதிக்க 200 மூடை சிமெண்ட் – ரூ. 94,000
மார்பில் கற்களை ஒட்டுவதற்கான பியோபி 30 மூடை – ரூ. 18,000
ஆக, பள்ளியின் புனர்நிர்மாணப் பணிகளுக்கு மொத்தம் 9 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எல்லா மஹல்லாக்களைச் சேர்ந்த பொதுமக்களும் தொடராகத் தொழுகைக்கு வரும் இப்பள்ளிவாசலின் மஹல்லாவாசிகளோ முற்றிலும் அன்றாடங்காய்ச்சிகள் என்பதால், பொதுமக்கள் தாராள மனதுடன் - நன்மைகளை அள்ளித் தரும் இப்புனித ரமழான் மாதத்தில் – இந்த இறையில்லப் பணிக்கு பணமாகவோ அல்லது பொருளாகவோ தந்துதவுமாறு பள்ளி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வகைக்காக பங்களிப்புச் செய்ய விரும்புவோர், பள்ளி நிர்வாகி எஸ்.என்.முஹம்மத் அலீ அவர்களை - +91 824 855 5800 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, தமது பங்களிப்பை உறுதி செய்துகொள்ள நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
|