தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள இச்சூழலில், தனியார் ஆலைகள் முறைகேடாகத் தண்ணீர் எடுப்பதைத் தடுத்து நிறுத்துமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்திய (SDPI) கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அக்கட்சியின் செய்தியறிக்கை:-
SDPI கட்சியின் தூத்துக்க்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் காயல்பட்டிணத்தில் 16/6/2017 வெள்ளிகிழமை அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி பைஜி தலைமையேற்று நடத்தினார். பொதுச்செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மைதீன் கனி வரவேற்புரை நிகழ்த்தினார். செயற்குழு உறுப்பினர்கள் தாஹீர், சேக் மற்றும் முஹம்மது அலி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கல்வத் அஹமத் கபீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது அலி நன்றியுரையாற்றினார்..
இந்த கூட்டத்தில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீருக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் DCW, STERLITE, SPIC போன்ற தனியார் ஆலைகளுக்கு லாரிகள் மூலமாக முறைகேடாக தண்ணீர் எடுப்பதை மாவட்ட ஆட்சி தலைவர் தடுத்து நிறுத்தி நீர் வளத்தை பாதுகாக்க வேண்டும்.
2. தூத்துக்குடி மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஏழு இடங்களில் நடத்தப்பட இருக்கும் ONGC எண்ணெய் நிறுவனத்தின் ஆய்வுப்பணிகளை உடனே கைவிட வேண்டுமென்றும் இச் செயற்குழு வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு கேட்டுக்கொள்கிறோம்.
3. SDPI கட்சியின் 9வது ஆண்டு துவக்க தினமான ஜுன் 21அன்று மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் கட்சி கொடியேற்றி கொள்கை விளக்கக் கூட்டம் நடத்துவது.
4. நோன்பு பெருநாளை முன்னிட்டு SDPI கட்சியின் சார்பாக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கல்வத் அஹ்மத் கபீர்,
செய்தி மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர்,
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
|