காயல்பட்டினம் மஸ்ஜித் அல்ஜதீத் - புதுப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு - அவர்களது வார விடுமுறை நாட்களில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்றுவிப்பதற்காக இயங்கி வரும் நிறுவனம் - மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை.
இந்நிறுவனத்தின் சார்பில், அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள், பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட அங்கத்தினர் பங்கேற்கும் வகையில், ஆண்டுதோறும் ரமழான் 17ஆம் நாள் - பத்ர் ஸஹாபா நினைவு நாளன்று இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு, பத்ரு ஸஹாபா நினைவு நாளான புனித ரமழான் மாதம் பிறை 17 அன்று (ஜூன் 13) இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் பேரீத்தம்பழம், கேக், சம்ஸா, கட்லெட், மத்ரஸா இயங்கி வரும் புதுப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கறி கஞ்சி, குளிர்பானம் ஆகியன பரிமாறப்பட்டன.
இந்நிகழச்சியில் மத்ரஸா மாணவர்களும், முன்னாள் மாணவர்களும், மத்ரஸா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.
புதுப்பள்ளியில் வழமையாக நோன்பு துறக்கும் காட்சியும் இதன் கீழ் தரப்பட்டுள்ளது:-
தகவல் & படங்கள்:
‘மாஸ்டர் கம்ப்யூட்டர்’ முஹம்மத் அலீ
|