நிகழும் ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்கள் & பள்ளிவாசல்களின் இமாம்-முஅத்தின்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருட்களைக் கொண்ட உணவுப் பொதி வழங்கிட – காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில் உதவி கோரப்பட்டது. அதன்படி, ஜகாத் & ஸதகா தொகையின் மூலம் 155 பேர் பயன்பெற்றுள்ளனர். இதுகுறித்த அவ்வமைப்பின் தகவலறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ.
கே.சி.ஜி.சி சார்பில் ஏழைகள் மற்றும் பள்ளி வாசல்களின் இமாம், முஅத்தின் ஆகியோருக்கு நோன்பு காலத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் விநியோகம் செய்ய உதவி செய்த நல்லுள்ளங்களுக்கு வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
ஜகாத் மற்றும் ஸதகா வகையில் இருந்து பெறப்பட்ட ரூ.2,12,400 தொகையில் காயல்பட்டணத்தில் உள்ள 38 பள்ளி வாசல்களின் இமாம்கள் மற்றும் முஅத்தின் உட்பட 67 நபர்களுக்கும் மற்றும் 88 ஏழைகளுக்கும் - ஆக மொத்தம் 155 நபர்களுக்கு அல்லாஹ்வின் உதவியால் மளிகை பொருட்களை வழங்கினோம் அல்ஹம்துலில்லாஹ், எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
தொடர்புக்கு,
முஹம்மது நூஹ்
+91 9382808007
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சொளுக்கு M.A.C.முஹம்மத் நூஹ்
|