கேரள மாநிலம் சங்கனாச்சேரியில், காயல்பட்டினம் நெசவு ஜமாஅத்தினர் அதிகளவில் வசித்து, வணிகம் செய்து வருகின்றனர். அவர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஆண்டுதோறும் ரமழான் மாதத்தில் ஏதேனும் ஒரு நாளில் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்துவது வழமை.
நடப்பாண்டின் இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 11.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று – கேரள மாநிலம் சங்கனாச்சேரி ஷாஹின் அப்பார்ட்மென்ட்டில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஷகீல் புகாரீ கிராஅத் ஓதினார். மோஷா கிளுறு அமீர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் துவங்கிய இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்வில் காயல்பட்டினம் பாரம்பரிய கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், இஞ்சி தேனீர் உள்ளிட்டவை அனைவருக்கும் பரிமாறப்பட்டன.
மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்ட பின், காயல்பட்டினம் பாரம்பரிய களறிக் கறியுடன் அனைவருக்கும் இடியாப்பமும், கேரளா சிறப்பு பத்ரியும் இரவுணவாகப் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நெசவு ஜமாஅத்தினர் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, சங்கனாச்சேரி வாழ் நெசவு ஜமாஅத்தினர் செய்திருந்தனர்.
கேரள மாநிலம் சங்கனாச்சேரியிலிருந்து...
தகவல் & படங்கள்:
H.I.ருக்னுதீன் புகாரீ
|