மனிதநேய ஜனநாயகக் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், நிகழும் ரமழானை முன்னிட்டு சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி, நேற்று (16.06.2017. வெள்ளிக்கிழமை) முதன்மைச் சாலையிலுள்ள துஃபைல் காம்ப்ளக்ஸ் மேல் தளத்தில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மத் நஜீப் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.ஜஃபருல்லாஹ் நன்றி கூறினார்.
எஸ்.டி.பீ.ஐ. கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும், ஜமாஅத் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். நிறைவில் மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட்டது.
மஜக மாவட்ட துணைச் செயலாளர் காதர் பாட்சா, இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஃபீக், தொழிற்சங்க அணி மாவட்ட செயலாளர் ராஸிக் முஸ்ஸம்மில், காயல்பட்டினம் நகர செயலாளர் ஜிஃப்ரீ, நகர பொருளாளர் மீரான் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
|