காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பில், நேற்று (ஜூன்18 ஞாயிற்றுக்கிழமை) 18.30 மணியளவில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஈக்கியப்பா தைக்கா மைதானத்தில் நடைபெற்றது.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். ஹாமிதிய்யா மாணவர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் அனைவரையும் வரவேற்றார். காக்கும் கரங்கள் அமைப்பின் துணைத்தலைவர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் நன்றி கூற, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் மேடை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மஃரிப் வேளை வந்ததும், நோன்பு துறப்பு நிகழ்ச்சி துவங்கியது. அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், கடற்பாசி, குளிர்பானம், கறிகஞ்சி, கட்லெட், வடை வகைகள், பழ வகைகள் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
ஏற்பாடுகளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் ஒருங்கிணைப்பில் மன்றத்தின் நண்பர்கள் செய்திருந்தனர். |