சஊதி அரபிய்யா - தம்மாம் ‘அஸ்ஹர்-ஆயிஷா சித்தீக்கா-ஐ.ஐ.எம் நலக்குழு’ சார்பில், ஹிஜ்ரி 1438 ஆண்டிற்கான பொது ஆலோசனை கூட்டம் - 16.06.2017 அன்று இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இது குறித்து அவ்வமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:
அஸ்ஹர்-ஆயிஷா சித்தீகா-ஐ.ஐ.எம் நலக்குழு
அல்ஜாமிஉல் அஸ்ஹர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி & இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக, பல்வேறு நல திட்ட பணிகளை ‘தம்மாம் அஸ்ஹர்-ஆயிஷா சித்தீகா-ஐ.ஐ.எம் நலக்குழு (Azhar-ASGIC-IIM Welfare Group – Dammam)’ செவ்வனே செய்து வருகின்றது, அல்ஹம்துலில்லாஹ்.
அவ்வகையில், ஹிஜ்ரி 1438 ஆண்டிற்கான நல திட்ட பணிகளை விளக்கவும் & அதற்கான நிதியினை திரட்டவும், இவ்வமைப்பின் சார்பில் கடந்த 16.06.2017 (ரமழான் பிறை 21) வெள்ளிக்கிழமையன்று - பொது ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இஃப்தார் நிகழ்ச்சி
தம்மாம் நகரின் பிரதான சந்தைப் பகுதியில் (அல்-ஸுஃக்) அமைந்துள்ள ஜனாப் சுல்தான் அப்துல் காதிர் இல்லத்தில் (அல்-முஆஜில் குடியிருப்பு கட்டிடம்) நடைபெற்ற இக்கூட்டம், இஃப்தார் நிகழ்ச்சியோடு துவங்கியது.
நலக்குழு உறுப்பினர்கள் பலரது ஒருங்கினைப்பில், இஃப்தார் நிகழ்வுக்கான ஆயத்த பணிகள் அனைத்தும் சிறப்பாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொது ஆலோசனைக் கூட்டம்
இஃப்தார் நிகழ்வுக்கு பின்னர், நலக்குழுவின் பொது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலாவதாக உரையாடிய ஜனாப் ரஃபீக், நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று - அல்ஜாமிஉல் அஸ்ஹர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி & ஐ.ஐ.எம். ஆகிய நிறுவனங்களில் - நடப்பாண்டில் திட்டமிடப்பட்டுள்ள பணிகளையும் அதற்கு தேவையான நிதி விவரங்களையும் எடுத்துக்கூறினார்.
ஆண்களுக்கான B.A. இஸ்லாமிய கல்வி எனும் பட்ட படிப்பினை அறிமுகம் செய்யவிருக்கும் அஸ்ஹர் அகடெமி, அஸ்ஹர் தீனியாத் - அல்குர்ஆன் வகுப்புகள் & ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரிக்கு தேவையான நீர் சுத்திகரிப்பான் போன்ற தகவல் / தேவைகளை அவர் விரிவாக விளக்கினார்.
அதன் பின்னர், நலக்குழுவின் தற்போதைய நிதியறிக்கையை ஜனாப் காசிம் வெளியிட்டு, நல திட்ட பணிகளுக்கான நிதியையும் திரட்டினார்.
இறுதியாக, துஆ கஃப்ஃபாராவுடன் பொது ஆலோசனை கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & நிழற்படங்கள்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
|