கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தூத்துக்குடி மாவட்ட கிளை சார்பாக, நிகழும் ரமழானை முன்னிட்டு, மாணவர்களுக்கான இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி, காயல்பட்டினத்தில் 18.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
அமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷேக் ஸாஹித் ரூமான் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் அப்துர்ரஹ்மான், எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினர்.
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிஜாம் நன்றி கூறினார். பின்னர் துவங்கிய இஃப்தார் நிகழ்வில் – அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், குளிர்பானங்கள், கடற்பாசி, வடை வகைகள், பழ வகைகள் உள்ளிட்ட பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
ருவைஸ்
(தூ-டி மாவட்ட செய்தி தொடர்பாளர், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)
|